எச்சரிக்கை! டிஜிட்டல் கைது! ஆசிரியையிடம் ரூ.5.50 கோடி அபேஸ்! – மக்களே ஏமாறாதீங்க!
இதற்கு ஒப்புக்கொண்ட ஆசிரியை தனது நிரந்தர வைப்புத் தொகையான ரூ.5 கோடியே 26 லட்சம் பணத்தை அவர்கள் சொன்ன வங்கிக்கணக்கிற்கு மாற்றினார்

டிஜிட்டல் கைது என சொல்லி ஆசிரியையிடம் ரூ.5.50 கோடியை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பையை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி செல்போனில் ஒரு வீடியோ கால் ஒன்று வந்தது. அந்த காலை ஆசிரியர் அட்டெண்ட் செய்யும்போது எதிர் திசையில் இரண்டு பேர் போலீஸ் சீருடையில் இருந்துள்ளனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியை என்ன விவரம் என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் தங்களை மும்பை சைபர் பிரிவு போலீசார் என அறிமுகம் செய்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் ஆசிரியையிடம் உங்கள் வங்கி கணக்கில் அதிக அளவு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும் உங்களை டிஜிட்டல் கைது செய்யப்போகிறோம் எனவும் மிரட்டி உள்ளனர்.
இதனால் பயந்து போன ஆசிரியை செய்வதறியாது திகைத்துள்ளார். இதையடுத்து அந்த நபர்கள் டிஜிட்டல் கைது செய்யக்கூடாது என்றால் இந்த வழக்கில் இருந்து தப்பிக்க தாங்கள் சொல்லும் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கு ஒப்புக்கொண்ட ஆசிரியை தனது நிரந்தர வைப்புத் தொகையான ரூ.5 கோடியே 26 லட்சம் பணத்தை அவர்கள் சொன்ன வங்கிக்கணக்கிற்கு மாற்றினார். மேலும் கிரிடிட் கார்டிலிருந்தும் ரூ.26 லட்சத்தை அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
இதையடுத்து சில நாட்களுக்கு பின் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆசிரியை போலீசில் புகார் அளித்தார். தகவலறிந்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டது மும்பையை சேர்ந்த 39 வயதான அன்சாரி என்பது தெரியவந்தது. மேலும் இவருடன் 2 சிறுவர்கள் இந்த குற்றப்பின்னணியில் இருந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து அன்சாரியையும் 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

