காலையிலேயே சோகம்! மௌனி அமாவாசை! கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பக்தர்கள் பலி!
கூட்ட நெரிசலால் பிரயாக்ராஜில் 12 கி.மீ தொலைவுக்கு வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
![காலையிலேயே சோகம்! மௌனி அமாவாசை! கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பக்தர்கள் பலி! Uttar Pradesh: 15 people died in stampede-like situation arose in Maha Kumbh காலையிலேயே சோகம்! மௌனி அமாவாசை! கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பக்தர்கள் பலி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/9aa70fdcce20dc8a1598ae787a528a641738116011015333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மௌனி அமாவாசையை முன்னிட்டு உத்தரப்பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.
படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த 13ஆம் மகா கும்பமேளா தொடங்கியது. அங்கு இருக்கும் திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் சுமார் ஒரு கோடி பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
நாடு முழுவதிலும் இருந்து பிரயாக்ராஜுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பக்தர்கள் வந்து குவிந்து வருகின்றனர். பிரயாக்ராஜ் ரயில் நிலையம் அருகே மட்டும் 7 ரயில் நிலையங்கள் உள்ளன. இதனால் வரும் ரயில்களில் எல்லாம் கூட்டம் குவிந்து வருகிறது.
பேருந்து வசதிகளும் அடிக்கடி இருக்கின்றன. சிவில் லைன்ஸ், ஜீரோ சாலை ஆகிய இடங்களில் பேருந்து முனையங்கள் அமைந்துள்ளன. வாகனங்கள் நிறுத்த மட்டுமே 30 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதில் 5 லட்சம் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரயாக்ராஜில் உள்ள விமான நிலையத்துக்கு 100 க்கும் மேற்பட்ட சிறப்பு விமான சேவைகளும் இயங்குகின்றன.
16வது நாளான நேற்று மட்டும் மகா கும்பமேளாவில் 3.90 கோடி பேர் புனித நீராடினர். இதுவரை 17.5 கோடி பேர் புனித நீராடி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மவுனி அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று 10 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மவுனி அமாவாசை என்பதால் கூட்டம் அலைமோதுகிறது. பிரயாக்ராஜில் அமைக்கப்பட்டுள்ள கூடார நகரம், கோபுர நகரத்தில் ஒரே நேரத்தில் 10 லட்சம் பேரை தங்க வைக்க முடியும். அவையும் நிரம்பி உள்ளன.
கூட்ட நெரிசலால் பிரயாக்ராஜில் 12 கி.மீ தொலைவுக்கு வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், விமான நிலையத்தில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவை மக்கள் நடந்தே கடக்க வேண்டும்.
24 மணிநேரமும் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. உயர்நீதிமன்றத்தின் அறிவுரைப்படி, ஜனவரி, 28,29,30 ஆகிய நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு இன்னும் வெளியிடவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
கும்பமேளாவில் ஏற்பட்ட இந்த அசம்பாவிதத்திற்கு அரசே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், அரசின் முறையற்ற ஏற்பாடுகளே இந்த கூட்ட ந்ரிசலுக்கு காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், எதிர்வரும் காலங்களில் இதுபோன்று நிகழாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் துரிதமாக மீட்பு பணி நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக குளறுபடிகளே கூட்ட நெரிசலுக்கு காரணம் என அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)