மேலும் அறிய
Advertisement
17 ஆண்டுகளுக்கு பிறகு ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு பணிகள் தொடக்கம்...!
’’1876, 1899, 1905, 2004 ஆகிய ஆண்டுகளில் முன்னதாக அகழாய்வு பணிகள் நடந்தன’’
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்படுகிறது. இங்கு முதன் முதலாக 1876 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் அகழாய்வு நடந்துள்ளது. ஜெர்மனி நாட்டை சேர்ந்த தொல்லியல் அறிஞர் டாக்டர் ஜாகோர் என்பவர் இங்கு அகழாய்வு செய்து, கிடைத்த பொருட்களை தனது நாட்டுக்கு கொண்டு சென்றுள்ளார். தொடர்ந்து 1899 மற்றும் 1905 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆங்கிலேய தொல்லியல் அதிகாரி அலெக்ஸாண்டர் ரியா என்பவர் ஆதிச்சநல்லூரில் ஆகழாய்வு செய்து, நூற்றுக்கணக்கான பொருட்களை எடுத்துச் சென்று சென்னையில் பார்வைக்கு வைத்துள்ளார். பின்னர் கடந்த 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் மத்திய தொல்லியல் துறை சார்பில் சத்தியமூர்த்தி தலைமையிலான குழுவினர் முதல் முறையாக ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணி மேற்கொண்டனர். அப்போது ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்த அகழாய்வு அறிக்கையை 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் மத்திய அரசு வெளியிட்டது.தொடர்ந்து தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூரில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அகழாய்வு பணியின் போதும் ஏராளமான பொருட்கள் கிடைத்தன. இதனால் ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் மிகவும் புகழ் பெற தொடங்கியது. இதையடுத்து ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2019 ஆம் ஆண்டு தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டார். அதன்பேரில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகளை மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் முடுக்கிவிட்டனர். தொடர்ச்சியாக மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளும், மாவட்ட வருவாய் துறை அதிகாரிகளும் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் தொடர்பான ஆய்வுகளை நடத்தி வந்தனர்.
ஆதிச்சநல்லூரில் உலகதரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படுவதை தொடர்ந்து, இங்கு மீண்டும் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை முடிவு செய்தது. இதற்கு மத்திய அரசும் அனுமதி அளித்தது. இதையடுத்து மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அகழாய்வு பணிகள் தொடங்கியது.
இந்த அகழாய்வு பணிகளை தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மத்திய தொல்லியல் துறையின் திருச்சி தென்மண்டல கண்காணிப்பாளர் ப.அருண் ராஜ், ஆதிச்சநல்லூர் பொருநை தொல்லியல் கழகத்தை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல ஆண்டுகளுக்கு பிறகு, பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணி தொடங்கப்பட்டுள்ளது. இது மிகவும் வரவேற்கதக்க ஒன்று. இங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தார். அதற்கான வேலைகளையும் தற்போது தொடங்க இருக்கிறார்கள்.
இந்தியாவில் அமையும் 5 முக்கிய அருங்காட்சியகத்தில் ஒன்றாக ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முழு ஒத்துழைப்பு அளித்து வரும் ஊர்மக்களுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும், அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மத்திய தொல்லியல் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அருங்காட்சியகம் அமைக்கப்பட்டதும். இங்கே மக்கள் வந்து செல்வதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்படும். இங்கு நடைபெறும் பணிகளுக்காக 17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அது போதுமானதாக இல்லை. முதல் கட்ட பணிகளுக்கு வேண்டுமானால் அது போதுமானதாக இருக்கும். தொடர்ந்து அடுத்தடுத்து தேவையான நிதி ஒதுக்கீட்டைடு மத்திய அரசு செய்ய வேண்டும் என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion