முடிவு வரும் நிலையில் புதிய தேர்தல் ஆணையர்.. திருமண நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடு..செய்தித் தொகுப்புகள் இங்கே
இந்தியாவில் கோவிட் 19-க்கான தடுப்பூசிகள் அதிக அளவில் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கோவிட் 19-க்கான தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற முக்கிய அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
1. இந்தியாவில் கோவிட் 19-க்கான தடுப்பூசிகள் அதிக அளவில் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கோவிட் 19-க்கான தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
2. சென்னை வேளச்சேரி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 92-வது வாக்குச்சாவடியில் வரும் 17ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
3. மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்த பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் Jean Yves Le Drian , இன்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசுகிறார்.
4. கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் , திருக்கோயிலில் நடக்கும் திருமணத்தில் 10 பேருக்கு மேல் கலந்து கொள்ளக்கூடாது. திருக்கோயில் மண்டபங்களில் நடக்கும் திருமணத்தில் 50 நபர்களுக்கு மேல் கலந்துகொள்ளக்கூடாது என தமிழக இந்து சமய அறநிலைத்துறை தெரிவித்தது.
5. நாட்டின் 24வது தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நேற்று பொறுப்பேற்றார். சுனில் அரோரா, ஏப்ரல் 12ம் தேதியுடன் தனது பணிக் காலத்தை நிறைவு செய்தார்.
6. பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை என்ற பெயரையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.
7. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கோவிட்19 தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
8. வெளிநாடுகளில் அவசரகால பயன்பாட்டில் உள்ள கொவிட் 19 தடுப்பூசிகளை இந்தியாவில் பயன்படுத்தும் பணிகளை மத்திய அரசு துரிதப் படுத்தியுள்ளது.
9. ஹரித்வாரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் ஆர் டி பி சி ஆர் பரிசோதனை கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கோவிட்19 பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விதித்துள்ளது.
10 . இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் 95வது ஆண்டு கூட்டம் மற்றும் துணைவேந்தர்களின் தேசியக் கருத்தரங்கு இன்று முதல் தொடங்குகிறது. இதில். பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் இன்று காலை 11 மணிக்கு காணொலி மூலம் உரையாற்றுகிறார்.