மேலும் அறிய

"இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க" - வடிவேலு காமெடியை வச்சு விஜய்யை கலாய்த்த அப்பாவு

ஒரு தலைமையை நம்பி இவர்கள் செல்வதை பார்த்தால் "இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க" என்ற நடிகர் வடிவேலுவின் காமெடிகாட்சி தான் நினைவுக்கு வருகிறது.

பல கட்சியை சேர்ந்தவர்கள் சனிக்கிழமை தோறும் தவெகவில் இணைந்து வரும் நிலையில்,  "இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க" என்ற நடிகர் வடிவேலுவின் காமெடிகாட்சி தான் நினைவுக்கு வருகிறது என்று முன்னாள் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.

வாரந்தோறும் சனிக்கிழமையில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் தவெகவில் இணைந்து வருவது அதிகரித்து வருகிறது. முன்னாள் அமைச்சர்கள், சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் எனப் பலர் இணைந்து வருகிறது. நேற்றுகூட, நடிகர் மன்சூர் அலிகான், திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், அதிமுக முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன் உள்ளிட்டோர் இணைந்தனர். நேற்று அதிகளவில் தவெகவில் இணைய வந்ததால் பனையூரில் கடும் கூட்டம் நெரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில், தவெகவில் பலர் இணைவது குறித்து முன்னாள் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

ஒருவர் அரசியல் கட்சியில் சேர்ந்து மக்கள் பணியாற்றுவதற்கு தன்னையே அர்ப்பணித்துக் கொள்வது இயல்பு.  சில நேரம் சில கட்சிகளில் இருந்து கொள்கை முரண்பாடு மற்றும் சில கருத்து வேறுபாடு காரணமாக  சிலர் ஒரு கட்சியை விட்டு விலகி இன்னொரு கட்சியில் இணைவது இயல்பான ஒன்றுதான். 

ஆனால் சமீப காலமாக சனிக்கிழமை தோறும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் MP-MLA க்கள்  மற்றும் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்கள் எல்லாம் பனையூர் பங்களா கேட் (Gate) முன் நிற்பதை பார்த்தால் ஜவுளி கடைகளில் ஆடித்தள்ளுபடிக்கு காத்திருக்கும் வாடிக்கையாளர்களைப்  போன்று தெரிகிறது. 

 பனையூர் பங்களா கேட் திறந்ததும், புதிய திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு முண்டியடித்து கொண்டு  ஓடும்  ரசிகர்களைப் போல் சென்றாலும் அங்கு கட்சித்  தலைவரை பார்க்க முடிவதில்லை. யாரோ ஒரு சிலர் கொடுக்கும் கட்சித்துண்டை தோளில் சுமந்து கொண்டு திரும்பி வருகின்றனர். 

தொண்டனின் நன்மைகளிலும் தீமைகளிலும் இயக்க தலைமை பங்கேற்கும் என்ற நம்பிக்கையில்தான் ஒவ்வொரு தொண்டனும் கட்சிக்காக இரவு பகலாக உழைப்பான். ஆனால்  கரூரில் தன்னை பார்க்க வந்த தொண்டர்கள், ரசிகர்கள் 41 பேர்கள் இறந்ததை திரும்பி கூட பார்க்காத , ஒரு தலைமையை நம்பி இவர்கள் செல்வதை பார்த்தால்  "இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க" என்ற நடிகர் வடிவேலுவின் காமெடிகாட்சி தான் நினைவுக்கு வருகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
கடற்கரையில் போதைப்பொருள் மருந்துகள்: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்
கடற்கரையில் போதைப்பொருள் மருந்துகள்: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல்
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
செங்கழுநீர் ஏரியை முழுமையாக தூர்வார மத்திய அரசு நிதி ஒதுக்க கவன ஈர்ப்பு தீர்மானம் மக்களவை எம்.பி., தகவல்
செங்கழுநீர் ஏரியை முழுமையாக தூர்வார மத்திய அரசு நிதி ஒதுக்க கவன ஈர்ப்பு தீர்மானம் மக்களவை எம்.பி., தகவல்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget