Annamalai: "கோவை கார் சிலிண்டர் விபத்து: காவல்துறை அறிக்கை தெளிவாக இல்லை" - அண்ணாமலை குற்றச்சாட்டு
Annamalai: மது விற்பனை செய்தி வெளியிட்டதற்கு பத்திரிகையாளர்களை மிரட்டுவதா என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அண்ணாலை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் பாஜக மாநில தலைவர் அண்ணாலை நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ” தீபாவளி நாள் அன்று டாஸ்மாக்கில் நடந்த மது விற்பனை பற்றி பத்திரிகையாளர்கள் மிரட்டப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். சாராயம் விற்பனை செய்வதில் கவனம் செலுத்தியதால்தான், கோவை தற்கொலைப் படை தாக்குதலை கோட்டை விட்டனர் என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தீபாவளிக்கு முதல்நாள் கடந்த 23ஆம் தேதி கோவையில் உக்கடம் பகுதியில் பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்தது. உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த நபர் தீயில் கருகி உயிரிழந்தார். கார் வெடி விபத்தில் இறந்தவர் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபின் என்பது தெரியவந்தது. மேலம், ஜமேசா முபின் வீட்டை போலீசார் சோதனையிட்டதில் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில் , முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து சென்னையில் நிரூபர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை கூறியதாவது, கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை எதையோ மூடி மறைக்கிறது என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன் என தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது, கோவையில் 55 கிலோ பொட்டாசியம், அமோனியம், சோடியம் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது குறித்து காவல்துறை ஏன் வெளியே சொல்லவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
கலவர பூமியாக கொங்கு மண்டலம் மாறிகிறது
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கலவர பூமியாக கொங்கு மண்டலம் மாறி வருகிறது என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். என்ஜிஓ, மிஷினரி செய்யும் வேலையை தமிழக உள்துறை செய்து வருகிறது என தெரிவித்தார். மேலும் கோவை உக்கடத்தில் நடந்தது தற்கொலைப்படை தாக்குதல் தான் சிலிண்டர் வெடித்ததாக கூறி காவல்துறை திசை திருப்புகின்றது.
மது விற்பனை செய்தி வெளியிட்டதற்கு மிரட்டுவதா?
தீபாவளி அன்று டாஸ்மாக்கில் நடந்த மது விற்பனை பற்றி செய்தி வெளியிட்டதற்காக பத்திரிகையாளர்கள் மிரட்டப்பட்டுள்ளனர் என அண்ணாலை தெரிவித்துள்ளார். கோவை உக்கடம் கார் வெடிப்பு சம்பவம் குறித்து பேச மறுக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி சாராயம் குறித்து உடனே பதிலளிக்கிறார் என தெரிவித்தார். சாராயம் விற்க கவனம் செலுத்தியதால் தான் கோவை தற்கொலைப்படை தாக்குதலை கோட்டை விட்டனர் என தெரிவித்தார்.
பிரச்னைக்கு நிதியுதவி தீர்வல்ல
மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்த செய்தியாளர் முத்துகிருஷ்ணனுக்கு பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல் எனவும் நிதியுதவி என்பது பிரச்னைக்கு தீர்வு அல்ல. இந்த விபத்துக்கு காரணமான நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.