மேலும் அறிய

’வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதற்கு முழு பொறுப்பையும் திமுக ஏற்க வேண்டும்’ - அண்ணாமலை

கரூரில் சோதனைக்கு சென்ற அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முழு பொறுப்பையும் திமுக தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக செங்கோல் செல்ல இருக்கிறது. சுதந்திரம் பெற்ற போது மவுண்ட்பேட்டனிடம் கொடுத்து செங்கோலை திரும்ப நேருவிடம் கொடுத்தனர். வருகின்ற காலத்தில் செங்கோல் இல்லாமல் ஆட்சி இல்லை என்ற அளவிற்கு பிரதமர் பெருமை சேர்த்துள்ளார். இதனை எதிர்க்கட்சியினர் அரசியலாக்கி கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதீனமே விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து எம்பிக்களும் இதில் பங்கேற்க வேண்டும். 

இந்த பாராளுமன்ற கட்டிடம் புதிதாக வரக்கூடிய எம்பிக்களுக்கும் சேர்த்தே விசாலமாக கட்டப்பட்டுள்ளது. எம்பிக்கள் இதில் பங்கேற்கவில்லை என்றால், இது ஒரு சரித்திர பிழையாக மாறிவிடும். பிரதமர் ஒரு கட்சியை சார்ந்திருந்தாலும் அவர் அரசியல் கட்சியை தாண்டி இருக்கக்கூடியவர். தமிழகத்தில் தற்போது மிகப்பெரிய அளவில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுக் கொண்டிருப்பது, ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான். தவறு செய்து இருக்கிறார்கள் என்பதால் சோதனை நடைபெறுகிறது. முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது, ஊழல் அமைச்சர் செந்தில் பாலாஜி எனக் கூறியுள்ளார். தற்போது திமுகவில் செந்தில் பாலாஜி இணைந்தவுடன், அவர் ஒரு புண்ணியவான் என ஆர்.எஸ். பாரதி கூறுகிறார். இதனை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

கரூரில் சோதனைக்கு சென்ற அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முழு பொறுப்பையும் திமுக தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். தங்களிடம் ஏற்கனவே கூறிவிட்டு வந்திருக்க வேண்டும் என அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகிறார். எங்காவது சோதனைக்கு செல்வதை கூறிவிட்டு வருவார்களா? கரூரில் சோதனை மேற்கொண்டு 1 மணி நேரம் 12 நிமிடம் கழித்து தான் காவல்துறையினர் சென்று உள்ளார்கள். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு என்பது இந்தியாவில் பேசு பொருளாக மாறியுள்ளது. முதலமைச்சர் சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆர்.எஸ்.பாரதி ஒரு பக்கம் அண்ணாமலை சாதாரண ஆள் என்று கூறிவிட்டு, சோதனை என்று வரும்போது அதற்கும் அண்ணாமலை தான் காரணம் என்று கூறுகிறார். ஆர்.எஸ். பாரதி கூறியதற்கான பதில் 2024ல் இருக்கும். இரு மொழிக் கொள்கையை பற்றி என்னுடைய கருத்தில் முரண்பாடு உள்ளது என அமைச்சர் பொன்முடி விவாதத்திற்கு வரவேண்டுமென கூறியிருக்கிறார். மருத்துவக் கல்வி, பொறியியல் கல்வி எல்லாம் தாய் மொழியில் மாறி வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் மாறவேண்டும் என அமைச்சர் கூறி உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வழி பொறியியல் கல்வியை நிறுத்தி உள்ளார்கள். இதை கண்டித்து அறிக்கை அளித்த பின்பு தங்களுக்கு தெரியாமல் இதை அறிவித்து விட்டார்கள் என திமுகவினர் கூறுகிறார்கள். 


’வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதற்கு முழு பொறுப்பையும் திமுக ஏற்க வேண்டும்’ - அண்ணாமலை

அமைச்சர் பொன்முடி பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும். அமைச்சர் பொன்முடியின் மகன் எந்த பள்ளியில் படித்தார்? அது இரு மொழியா? மும்மொழியா? உங்களது பேரன் பேத்தி எந்த பள்ளியில் படிக்கிறார்கள்? அது இருமொழியா? மும்மொழியா? முதலமைச்சரின் பேரன், பேத்திகள் படிப்பது இருமொழியா? மும்மொழியா? எனவே என்னுடன் விவாதத்திற்கு வரும் போது அனைத்தையும் தயார் செய்துவிட்டு வாருங்கள். உங்களுடைய குடும்பத்தினர் மட்டும் பழமொழிகளை கற்றுக்கொண்டு உலகத்தை ஆள வேண்டும். உங்களுடன் விவாதத்திற்கு வருவதற்கு நான் தயார். நேரத்தையும் இடத்தையும் கூறுங்கள் நான் விவாதத்திற்கு வருகிறேன். அனைத்தையும் விவாதிப்போம். அனைத்தையும் தோலுரித்துக் காட்டுவோம். 

முதலமைச்சர் வெளிநாடு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதே சமயம் வெளிநாடு சென்று விட்டு வரும் போது, எதனைக் கொண்டு வந்திருக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். இதற்கு முன் அவர் துபாய் சென்று வந்தது குறித்தும், பல்வேறு அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வந்தது குறித்தும் அறிக்கை வெளியிட வேண்டும். கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு என்ன என்ன திட்டங்கள் வந்துள்ளது என்பதை கூறுங்கள். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு உங்களுடைய திட்டங்கள் என்ன என்பதை கூறுங்கள். பல்வேறு மாநிலங்கள் முன்னேறி வருகிறது. நம்முடைய வேகம் குறைந்துள்ளது. எனவே முதலமைச்சரின் உள்ளே அறிக்கைக்காக காத்திருக்கிறோம். 

வருமானவரித்துறை சோதனை ஒரு இரு நாட்களில் முடிவது போல் தெரியவில்லை. நடைபெறுகிற சோதனைகளுக்கு என்மீது பழி போடுவதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டையே சாராய மாநிலமாக மாற்றி இருக்கக்கூடிய ஒரு அமைச்சர் சோதனையை பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. வருமான வரித்துறை அறிக்கை வெளியிடும் வரை நாம் பொறுத்திருக்கலாம். 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் மாதத்திற்குள் மாற்றிவிட பிரதமர் கூறினால் அது டிராமா என சொல்கிறார்கள். பாராளுமன்றத்தில் செங்கோலை வைத்தால் அதனையும் பாஜகவின் டிராமா எனக் கூறுகிறார்கள். அதேபோல் தற்போது சோதனை நடைபெற்றால் அதனையும் டிராமா எனக் கூறுகிறார்கள்.  

ஆவின் குறித்து முதலமைச்சர் எழுதிய கடிதம் ஒரு டிராமா என நான் கூறுகிறேன். ஏனென்றால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பால் வாங்கும் அளவு 35 லட்சத்திலிருந்து 32 லட்சமாக குறைந்துள்ளது. ஆவினின் செயல்பாட்டு குறையை மறைப்பதற்காக அமுல் மீது பழி சுமத்துவது என்பதுதான் டிராமாவே தவிர நாங்கள் செய்வது ட்ராமா இல்லை. திமுக பைல்ஸ் இரண்டாம் பாகம் முழுவதுமே திமுக ஆட்சிக்கு வந்த பிறகு என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பது தான். என் மண் என் மக்கள் என்ற பயணம் ஜூலை ஒன்பதாம் தேதி துவங்க உள்ளது. அந்த பயணத்தில் ஊழலை பற்றி மட்டும்தான் பேச உள்ளோம். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு செல்லும் போதும், அங்குள்ள திமுகவின் ஊழலை பற்றி தான் பேசப் போகிறோம். 

ஜூன் 10ஆம் தேதிக்குள் பாஜக சார்பில் வெள்ளை அறிக்கை அளிக்க உள்ளோம். அந்த வெள்ளை அறிக்கையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான திட்டங்கள், 75% டாஸ்மாக்கை மூடுவது, கள் மூலமாக வரக்கூடிய வருமானம் வருமான இழப்பை சரி செய்வது அனைத்தையும் கூறியுள்ளோம். தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் செய்யும் ஊழலை சுட்டிக்காட்டுவது போல், ஆட்சியில் இருந்தவர்கள் செய்ததையும் கூற வேண்டிய கடமை உள்ளது. இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு உரிமை உள்ளது அதனை கேட்பதற்கு பாஜகவிற்கு உரிமை இல்லை. ஹிஜாப் விவகாரத்தில் நடந்திருக்க கூடிய சம்பவம் என்பது வேறு. அங்கிருந்தவர் ஹிஜாப் பற்றி பேசவில்லை ஏன் தாமதமாக மருத்துவர்கள் வந்தார்கள் என்றுதான் கேள்வி எழுப்பியுள்ளார். பிறகு அது அரசியல் சண்டையாக மாறி உள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget