மேலும் அறிய

தமிழக மீனவர்கள் கைது: அத்துமீறிய சிங்கள கடற்படை... மத்திய அரசு நடவடிக்கை தேவை - அன்புமணி

தமிழக மீனவர்கள் மேலும் 21 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இலங்கையுடன் பேசி தீர்வு காண வேண்டும்.

தமிழக மீனவர்கள் மேலும் 21 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இலங்கையுடன் பேசி தீர்வு காண வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 21 பேரை சிங்களக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவர்களின் 4 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வங்கக்கடலில் பாரம்பரிய உரிமை உள்ள இடத்தில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து அத்துமீறி கைது செய்வது கண்டிக்கத்தக்கது.

தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்வது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் 16ஆம் தேதி மீன்பிடி தொடங்கிய பிறகு இன்று வரையிலான நான்கு மாதங்களில் மட்டும் 425 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி 58 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக சேர்த்து தமிழக மீனவர்களின் 196 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இன்றைய நிலையில் மட்டும் இலங்கை சிறைகளில் 131 பேர் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

இலங்கை சிறையில் வாடிக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 50 பேர் கடந்த 5-ஆம் தேதி தான் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு முன்பாகவே மேலும் 21 பேரை கைது செய்து சிறைகளில் அடைத்திருக்கிறது இலங்கை அரசு. இதன் மூலம் தமிழக மீனவர்களை கைது செய்து சிறைகளில் அடைப்பதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரங்களை பறிப்பதை இலங்கை அரசு வாடிக்கையாக வைத்துக் கொண்டிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இலங்கைக்கு கடந்த வாரம் அரசு முறைப் பயணமாக சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக மீனவர்கள் சிக்கலை கனிவுடன் கையாள வேண்டும்; அவர்களுக்கு கடுமையான அபராதங்களை விதிக்கக்கூடாது; சிறைகளில் உள்ள மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன் பிறகும் தமிழக மீனவர்களை சிங்கள அரசு தொடர்ந்து கைது செய்வது இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும். இவை இனியும் தொடர இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி தீர்வு காணவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vettaiyan Movie Review: சூப்பர் ஸ்டாரின் வேட்டையன்.. ரஜினி ரசிகர்களுக்கு வேட்டையா? விரிவான விமர்சனம் இதோ
சூப்பர் ஸ்டாரின் வேட்டையன்.. ரஜினி ரசிகர்களுக்கு வேட்டையா? விரிவான விமர்சனம் இதோ
ஓய்வை அறிவித்தார் டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால் : இதுதான் இவரது கடைசி போட்டி.!
ஓய்வை அறிவித்தார் டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால் : இதுதான் இவரது கடைசி போட்டி.!
Maya Tata: ரத்தன் டாடாவின் பல்லாயிரம் கோடி ரூபாய் சாம்ராஜ்ஜியம்; டாடா குழுமத்தின் வாரிசு இவரா? யார் இந்த மாயா டாடா?
ரத்தன் டாடாவின் பல்லாயிரம் கோடி ரூபாய் சாம்ராஜ்ஜியம்; டாடா குழுமத்தின் வாரிசு இவரா? யார் இந்த மாயா டாடா?
Breaking News LIVE : தீட்சிதர்கள் மட்டுமே விளையாடக்கூடிய மைதானத்தை ஏற்படுத்தித் தரலாம் : ராமதாஸ் கிண்டல்
Breaking News LIVE : தீட்சிதர்கள் மட்டுமே விளையாடக்கூடிய மைதானத்தை ஏற்படுத்தித் தரலாம் : ராமதாஸ் கிண்டல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ratan Tata Untold love story  | ரத்தன் டாட்டா BREAK UP 💔 கடைசி வரை BACHELOR!Ratan Tata Passed away | RIP ரத்தன் டாடாஉடலுக்கு இறுதி அஞ்சலி! கண்ணீர் மழையில் மக்கள்History of Ratan Rata | Mukesh Ambani on Ratan Tata | ”உயிர் நண்பனை இழந்துட்டேன்” என்னால் தாங்க முடியவில்லை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettaiyan Movie Review: சூப்பர் ஸ்டாரின் வேட்டையன்.. ரஜினி ரசிகர்களுக்கு வேட்டையா? விரிவான விமர்சனம் இதோ
சூப்பர் ஸ்டாரின் வேட்டையன்.. ரஜினி ரசிகர்களுக்கு வேட்டையா? விரிவான விமர்சனம் இதோ
ஓய்வை அறிவித்தார் டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால் : இதுதான் இவரது கடைசி போட்டி.!
ஓய்வை அறிவித்தார் டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால் : இதுதான் இவரது கடைசி போட்டி.!
Maya Tata: ரத்தன் டாடாவின் பல்லாயிரம் கோடி ரூபாய் சாம்ராஜ்ஜியம்; டாடா குழுமத்தின் வாரிசு இவரா? யார் இந்த மாயா டாடா?
ரத்தன் டாடாவின் பல்லாயிரம் கோடி ரூபாய் சாம்ராஜ்ஜியம்; டாடா குழுமத்தின் வாரிசு இவரா? யார் இந்த மாயா டாடா?
Breaking News LIVE : தீட்சிதர்கள் மட்டுமே விளையாடக்கூடிய மைதானத்தை ஏற்படுத்தித் தரலாம் : ராமதாஸ் கிண்டல்
Breaking News LIVE : தீட்சிதர்கள் மட்டுமே விளையாடக்கூடிய மைதானத்தை ஏற்படுத்தித் தரலாம் : ராமதாஸ் கிண்டல்
Vettaiyan Twitter Review : வெற்றிபெற்றதா ரஜினிகாந்த் ஞானவேல் கூட்டணி...வேட்டையன் பட ட்விட்டர் விமர்சனங்கள் சொல்வது என்ன?
Vettaiyan Twitter Review : வெற்றிபெற்றதா ரஜினிகாந்த் ஞானவேல் கூட்டணி...வேட்டையன் பட ட்விட்டர் விமர்சனங்கள் சொல்வது என்ன?
"எங்களை வாழ வைத்தார் விஜய்" - தவெக மாநாடு திடலில் நடந்த சுவாரஸ்யம்
’நீட் தேர்வைக் கொண்டு வந்ததே திமுகதான்; ரத்துசெய்ய எதுவுமே செய்யவில்லை’- ஈபிஎஸ் தாக்கு
’நீட் தேர்வைக் கொண்டு வந்ததே திமுகதான்; ரத்துசெய்ய எதுவுமே செய்யவில்லை’- ஈபிஎஸ் தாக்கு
Simi Garewal - Tata :
Simi Garewal : "இந்த இழப்பு தாங்கிக்கொள்ள முடியாதது" : ரத்தன் டாடாவின் முன்னாள் காதலி உருக்கம்
Embed widget