மேலும் அறிய
Advertisement
மேகதாது அணையை கட்டினால் நிர்வாக பொறுப்பு தமிழகத்திற்கு கொடுப்பார்களா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
இராசிமணல் அணை கட்டும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்டினால் அதனை நிர்வகிக்கும் பொறுப்பை தமிழகத்திற்கு கொடுப்பார்களா என கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராசி மணல் அணையை கட்ட தமிழக அரசு மற்றும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து மனு அளித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,
காவிரி ஆறு தமிழ்நாட்டின் உயிர்நாடி 5 கோடி மக்கள் காவிரி நம்பியிருக்கிறார்கள் சென்னை உட்பட 23 மாவட்டங்கள் காவிரியை நம்பி இருக்கிறார்கள். ஆண்டுதோறும் கர்நாடக அரசிடம் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம் ஆனால் அங்குள்ள நான்கு அணைகளும் நிரம்பிய உடனே உபரிநீரை தமிழகத்திற்கு கர்நாடகா அரசு திறந்து விடுகிறது. மேலும் பருவ காலங்களில் தண்ணீரை சேமிக்க முடியாத சூழல் இருக்கிறது. அதனால் இராசி மணல் அணை கட்டும் திட்டம் நல்ல யோசனை அதனை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
தமிழகத்திற்கு ஒரு செட் தண்ணீர் வராது
மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு ஒரு செட் தண்ணீர் வராது காவிரி உபரி நீரை நான்கு முக்கிய அணைகளில் நிரம்பிய பிறகு வேறு வழியின்றி தமிழகத்திற்கு உபநீரை திறந்து விடுகிறார்கள் ஆனால் ராசி மணல் அணை கட்டினால் நமக்கு தேவையான தண்ணீரை நாம் சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.
ராசிமணல் அணை திட்டத்தை கொண்டு வர வேண்டும்
வருங்காலங்களில் பருவநிலை மாற்றம் காலநிலை மாற்றம் உள்ளிட்டவர்களால் அடுத்த 10 ஆண்டுகளில் கடுமையான வறட்சி நமக்கு ஏற்பட உள்ளது என ஐநா சபை தெரிவித்துள்ளது இதுபோன்ற நீர் பாசன திட்டங்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முறையிலே தமிழக மக்களுக்கு ராசிமணல் அணை திட்டத்தை கொண்டு வர வேண்டும்.
நான் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமாரை கேட்கிறேன், முல்லைப் பெரியாறு 999 வருடங்கள் நிர்வகிக்கும் உரிமையை கொடுத்தது போல மேகதாது அணையை 999 வருடங்கள் கொடுக்கட்டும் நாங்களே அணையை நிர்வகித்துக் கொள்கிறோம். அதற்கு அவர் சம்மதிப்பாரா? நாங்கள் தண்ணீர் கொடுக்கிறோம் கர்நாடகா கேட்பது 5 டி எம் சி தண்ணீர் தான் நாங்கள் 20 டிஎம்சி கொடுக்கிறோம் எங்களுடைய கட்டுப்பாட்டில் அணை இருக்கட்டும் தாராளமாக நாங்கள் தண்ணீர் கொடுக்கிறோம். இவர்கள் ஒத்து கொள்வரா?
கர்நாடக அரசுக்கு ஈகோ
கர்நாடக அரசை நம்ப முடியவில்லை உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதில்லை நடுவர் மன்ற தீர்ப்பை மதிப்பதில்லை மதிக்காத ஒரு அரசு இருக்கும் பொழுது எப்படி நம்மால் பேச முடியும். 11 கன அடி நீரை கேட்டோம் ஆனால் 8000 விடுவோம் என திறந்துவிட்டார்கள். ஆனால் மழை பெய்து அணை நிரம்பியதும் 16 ஆயிரம் அடி விடுகிறார்கள். அந்த அளவிற்கு கர்நாடக அரசுக்கு ஈகோ. திமுக கர்நாடகா மற்றும் கேரளா உடன் கூட்டணியில் தான் இருக்கிறார்கள். அவர்களுடன் பேசி இந்த விவகாரங்களுக்கு சமூகத் தீர்வு காண வேண்டும்.
ஒரு குவிண்டலுக்கு ஆறுநூறு ரூபாய் சேர்த்து தமிழக அரசு கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3000 வழங்க வேண்டும் என்பது தான் உழவர்களின் கோரிக்கை ஆகும். ஆனால், நேற்று முதல் தொடங்கியுள்ள கொள்முதல் பருவத்தில் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையான 2320 ரூபாயுடன் ரூ.130 ஊக்கத்தொகை சேர்த்து ரூ.2450 மட்டும் தான் வழங்கப்படுகிறது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல.
எனவே, உழவர்கள் நலனையும், தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3000 கிடைக்கும் வகையில் ஊக்கத்தொகையில் அளவை தமிழக அரசு உயர்த்த வேண்டும். மத்திய அரசு ஆண்டுக்கு 50 ரூபாய் 60 ரூபாய் என கொடுத்து வருகிறார்கள் அவர்களிடம் கேட்டு எந்த பிரயோஜனமும் இல்லை அதனால் தமிழக அரசு நெல் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion