மேலும் அறிய

TN Rain Alert: குஷியான செய்தி மக்களே.. இன்று முதல் மூன்று நாட்களுக்கு மழை கொட்டப்போகுது.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை நிலவரம்..

தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,  அடுத்த 3 நாட்களுக்கு ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,  அடுத்த 3 நாட்களுக்கு ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

17.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

18.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

19.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

20.06.2023 மற்றும் 21.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை : 

17.06.2023 மற்றும் 18.06.2023:  தமிழகத்தில்  ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும். 
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):   

பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), புலிப்பட்டி (மதுரை) தலா 2, ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), வால்பாறை PTO  (கோயம்புத்தூர்) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

வங்கக்கடல் பகுதிகள்: 

17.06.2023 முதல் 21.06.2023 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

17.06.2023 மற்றும் 18.06.2023: வடதமிழக கடலோரப்பகுதிகள், தென் ஆந்திர கடலோரப்`பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

17.06.2023 முதல் 21.06.2023 வரை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

17.06.2023 முதல் 21.06.2023 வரை: இலட்சத்தீவு பகுதிகள், கேரள - கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40  முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Odisha CM: பிரதமர் முன்னிலையில் ஒடிசா முதலமைச்சராக பதவியேற்றார் மோகன் சரண்! அருகிலேயே நவீன் பட்நாயக்!
Odisha CM: பிரதமர் முன்னிலையில் ஒடிசா முதலமைச்சராக பதவியேற்றார் மோகன் சரண்! அருகிலேயே நவீன் பட்நாயக்!
Tamilisai Soundararajan : “அமித் ஷா மேடையில் என்னதான் சொன்னார்?” - கையெடுத்து கும்பிட்டுவிட்டு, எஸ்கேப் ஆன தமிழிசை!
Tamilisai Soundararajan : “அமித் ஷா மேடையில் என்னதான் சொன்னார்?” - கையெடுத்து கும்பிட்டுவிட்டு, எஸ்கேப் ஆன தமிழிசை!
Breaking News LIVE: சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
Breaking News LIVE: சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
போலீசார் கண் முன்னே 3 பேருக்கு கத்திக்குத்து... போடியில் பரபரப்பு
போலீசார் கண் முன்னே 3 பேருக்கு கத்திக்குத்து... போடியில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Kanimozhi : உதய்-க்காக கனிமொழிக்கு பதவியா? கலைஞர் பாணியில் ஸ்டாலின்! பின்னணி என்ன?Amitshah Warning to Tamilisai : மேடையிலேயே  தமிழிசையை கண்டித்த அமித்ஷா? பாஜக உட்கட்சி பூசல்Annamalai Vs Tamilisai : ”தலைமைக்கு கட்டுப்படனும்” பாஜக போட்ட ORDER! பதறிய அ.மலை, தமிழிசைAnnamalai Minister post  : அண்ணாமலைக்கு NO... அமைச்சர் ஆகாதது ஏன்? பாஜகவின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Odisha CM: பிரதமர் முன்னிலையில் ஒடிசா முதலமைச்சராக பதவியேற்றார் மோகன் சரண்! அருகிலேயே நவீன் பட்நாயக்!
Odisha CM: பிரதமர் முன்னிலையில் ஒடிசா முதலமைச்சராக பதவியேற்றார் மோகன் சரண்! அருகிலேயே நவீன் பட்நாயக்!
Tamilisai Soundararajan : “அமித் ஷா மேடையில் என்னதான் சொன்னார்?” - கையெடுத்து கும்பிட்டுவிட்டு, எஸ்கேப் ஆன தமிழிசை!
Tamilisai Soundararajan : “அமித் ஷா மேடையில் என்னதான் சொன்னார்?” - கையெடுத்து கும்பிட்டுவிட்டு, எஸ்கேப் ஆன தமிழிசை!
Breaking News LIVE: சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
Breaking News LIVE: சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
போலீசார் கண் முன்னே 3 பேருக்கு கத்திக்குத்து... போடியில் பரபரப்பு
போலீசார் கண் முன்னே 3 பேருக்கு கத்திக்குத்து... போடியில் பரபரப்பு
TN Assembly Session:  9 நாள்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. வெளியான நிகழ்ச்சி நிரல் விவரம்..!
9 நாள்கள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்.. வெளியான நிகழ்ச்சி நிரல் விவரம்..!
Share Market Today: தேக்கநிலையில் இந்திய பங்குச் சந்தை; சரிவில் இன்ஃபோசிஸ், டிசிஎஸ்
Share Market Today: தேக்கநிலையில் இந்திய பங்குச் சந்தை; சரிவில் இன்ஃபோசிஸ், டிசிஎஸ்
kuwait Fire Accident: குவைத்தில் பயங்கர தீ விபத்து.. தமிழர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
குவைத்தில் பயங்கர தீ விபத்து.. தமிழர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
Endometriosis: கேரளா ஸ்டோரி பட நடிகைக்கு 'எண்டோமெட்ரியோசிஸ்’ பாதிப்பு!  அறிகுறிகளும் தீர்வும்!
Endometriosis: கேரளா ஸ்டோரி பட நடிகைக்கு 'எண்டோமெட்ரியோசிஸ்’ பாதிப்பு! அறிகுறிகளும் தீர்வும்!
Embed widget