மேலும் அறிய

Mettur Dam:மேட்டூர் அணையின் நீர்வரத்து 4,421 கன அடியில் இருந்து 5,056 கன அடியாக அதிகரிப்பு.

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 6,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை இன்னும் தொடங்காமல் உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 3,367 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 4,421 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 5,056 கன அடியாக அதிகரித்துள்ளது. 

Mettur Dam:மேட்டூர் அணையின் நீர்வரத்து 4,421 கன அடியில் இருந்து 5,056 கன அடியாக அதிகரிப்பு.

அணையின் நீர் மட்டம் 37.92 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 11.04 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் 6,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam:மேட்டூர் அணையின் நீர்வரத்து 4,421 கன அடியில் இருந்து 5,056 கன அடியாக அதிகரிப்பு.

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 97.52 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 20.92 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,985 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4,742 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 57.18 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 14.91 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 4,229 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 3,490 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth: ரசிகர்கள் அதிர்ச்சி..! நடிகர் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி - காரணம் என்ன?
Rajinikanth: ரசிகர்கள் அதிர்ச்சி..! நடிகர் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி - காரணம் என்ன?
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Breaking News LIVE 1st OCT 2024: காந்தி மண்டப வளாகத்தில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்த ஆளுநர் ரவி.
Breaking News LIVE 1st OCT 2024: காந்தி மண்டப வளாகத்தில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்த ஆளுநர் ரவி.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடிHaryana BJP : முரண்டு பிடித்த சீனியர்கள் தூக்கியடித்த ஹரியானா பாஜக..குதூகலத்தில் காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth: ரசிகர்கள் அதிர்ச்சி..! நடிகர் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி - காரணம் என்ன?
Rajinikanth: ரசிகர்கள் அதிர்ச்சி..! நடிகர் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதி - காரணம் என்ன?
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Breaking News LIVE 1st OCT 2024: காந்தி மண்டப வளாகத்தில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்த ஆளுநர் ரவி.
Breaking News LIVE 1st OCT 2024: காந்தி மண்டப வளாகத்தில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்த ஆளுநர் ரவி.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Today Rasipalan 1st Oct 2024: விருச்சிகத்திற்கு யோகம்! கும்பத்துக்கு இன்பம்! உங்க ராசிக்கு இந்த நாள் எப்படி?
Today Rasipalan: விருச்சிகத்திற்கு யோகம்! கும்பத்துக்கு இன்பம்! உங்க ராசிக்கு இந்த நாள் எப்படி?
Most Test Wickets:ஜடேஜா 300 - டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்தியர்கள் யார்?
Most Test Wickets:ஜடேஜா 300 - டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்தியர்கள் யார்?
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
Embed widget