மது அரக்கனுக்கு முடிவு கட்டுங்க - அன்புமணி ராமதாஸ் அறிக்கை..
’தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்’ - பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்
குடிபோதையில் 2 வயதுக் குழந்தை அடித்துக் கொன்ற தந்தை - மது அரக்கனுக்கு முடிவு கட்ட வேண்டும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், தூத்துக்குடி தாளமுத்து நகரில் குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட மோதலில் 2 வயது குழந்தையை சுவற்றில் அடித்து கணவன் கொலை செய்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். குடி மனிதனை கொடூரனாக்கும் என்பதற்கு இது தான் சிறந்த உதாரணம் ஆகும்.
தூத்துக்குடி தாளமுத்து நகரில் குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட மோதலில் 2 வயது குழந்தையை சுவற்றில் அடித்து கணவன் கொலை செய்த செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். குடி மனிதனை கொடூரனாக்கும் என்பதற்கு இது தான் சிறந்த உதாரணம் ஆகும்.(1/3)#Prohibition
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) April 19, 2022
அனைத்துக் குற்றங்களுக்கும் பிறப்பிடமாக விளங்குவது மது தான். கொலை, கொள்ளை உள்ளிட்ட அனைத்து குற்றங்களுக்கும் மது தான் மூல காரணமாக இருக்கிறது. மது வணிகம் தொடரும் வரை, மனித குலத்துக்கு எதிரான இத்தகைய கொடியக் குற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியாது!(2/3)
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) April 19, 2022
குற்றங்கள் இல்லாத, அமைதியான தமிழகத்தை உருவாக்க மதுவிலக்கு தான் ஒரே வழி ஆகும். அதனால் தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்!(3/3)@CMOTamilnadu
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) April 19, 2022