மேலும் அறிய

''நானும் எம்.ஜி.ஆர் ரசிகன்தான்''.. ஆட்டோ ட்ரைவருக்கு ஃபோன் செய்த முதல்வர் ஸ்டாலின்! வைரல் ஆடியோ!

முக ஸ்டாலினுக்கு  கடிதம் ஒன்று வந்தது. வேலூர் செண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த எம்ஜிஆரின் தீவிர ரசிகரான ஆட்டோ ட்ரைவர் பன்னீர்செல்வம் அந்தக்கடிதத்தை முதல்வருக்கு எழுதியுள்ளார்.

தனக்கு கடிதம் எழுதி பாராட்டு தெரிவித்த ஆட்டோ ட்ரைவருக்கு போன் செய்து முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்த ஆடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது

கடந்த வாரங்களில் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். அதன்படி வேலூர் மாவட்டத்துக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் சென்னை திரும்பி வழக்கமான பணிகளை மேற்கொண்டார். இந்நிலையில் வேலூரில் இருந்து முக ஸ்டாலினுக்கு  கடிதம் ஒன்று வந்தது. வேலூர் செண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த எம்ஜிஆரின் தீவிர ரசிகரான ஆட்டோ ட்ரைவர் பன்னீர்செல்வம் அந்தக்கடிதத்தை முதல்வருக்கு எழுதியுள்ளார். அந்தக்கடித்தத்தில், ''முதல்வர் அவர்களே, நீங்கள் ஆட்சி பொறுப்பேற்ற போது எனக்கு வாக்களித்த மற்றும் எனக்கு வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் விதட்தில் ஆட்சி செய்வேன் என்று தெரிவித்தீர்கள். அந்த வகையில் உங்களின் சிறப்பான ஆட்சிக்கு உங்களுக்கு வாக்களிக்காத எம்ஜிஆரின் தீவிர ரசிகரான இந்த பன்னீர்செல்வத்தின் வாழ்த்துகள்.

'நானும் எம்.ஜி.ஆர் ரசிகன்தான்''.. ஆட்டோ ட்ரைவருக்கு ஃபோன் செய்த முதல்வர் ஸ்டாலின்! வைரல் ஆடியோ!

நீங்கள் வேலூர் வந்த போது எந்தவித போக்குவரத்து இடையூறும் இல்லாமல் நிம்மதியாக ஆட்டோ ஓட்டினோம்.  எங்கள் தொழில் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை. நீங்கள் வந்துபோனதற்கான எந்த அறிகுறியும் எங்களுக்கு தெரியவில்லை. இவை அனைத்தும் உங்களின் உத்தரவின்பேரில்தான் நடந்திருக்கும் என்பதை அறிவேன். மேலும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி தமிழ்நாட்டை முன்னேற்றுவீர்கள் என எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. வாழ்த்துகள்'' என குறிப்பிட்டு இருந்தார். கடிதத்தோடு கலைஞரும் எம்ஜிஆரும், எம்ஜிஆர் ஸ்டாலின் இருக்கும் புகைப்படத்தையும் இணைத்து அனுப்பி இருந்தார். இந்த கடித்தத்தை படித்த முதல்வர் ஸ்டாலின் ஆட்டோ ட்ரைவர் பன்னீர்செல்வத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி நன்றி தெரிவித்தார். 

அந்த போன் உரையாடலில் பேசிய  முதல்வர் ஸ்டாலின்,

'’நான்,  முகஸ்டாலின் பேசுகிறேன். உங்க கடிதத்தை படிச்சேன். நீங்க புரட்சிதலைவர் ரசிகர்னு சொல்லி இருக்கீங்க. நானும் எம்ஜிஆர் ரசிகன் தான். எனக்கு பாராட்டு சொல்லி இருக்கீங்க. அந்த பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கத்தான் போன்போட்டேன்’’ என்றார்.

முதல்வரின் போனை சற்றும் எதிர்பாராத ஆட்டோ ட்ரைவர் பன்னீர்செல்வம் ஆச்சரியத்தில் திக்குமுக்காடினார். ஸ்டாலினுக்கு பதில் தெரிவித்த பன்னீர்செல்வம், ’’ரொம்ப நன்றிங்கண்ணா. நீங்களே லைன்ல வந்தது ரொம்ப சந்தோஷம். உங்க கைக்கு லெட்டர் கிடைக்காதுன்னு நினைச்சுட்டேன்’’ என்றார்.

'நானும் எம்.ஜி.ஆர் ரசிகன்தான்''.. ஆட்டோ ட்ரைவருக்கு ஃபோன் செய்த முதல்வர் ஸ்டாலின்! வைரல் ஆடியோ!

அதற்கு பதில் சொன்ன ஸ்டாலின், ’’அதெப்படி லெட்டர் கிடைக்காம போகும். கரெக்டா கைக்கு வந்து சேர்ந்துடுச்சி’’ என்றார். மேலும் பன்னீர்செல்வத்தின் தொழில் குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார். இந்த ஆடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Embed widget