“சொல்வதொன்று, செய்வதொன்று.." மா.சுப்ரமணியன் பேசிய வீடியோக்களை வெளியிட்ட அண்ணாமலை!
தமிழ்நாட்டில் உள்ள 2 ஆயிரம் மினி கிளினிக்குகளை மூடப்பட்டது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அம்மா மினி கிளினிக் என்ற திட்டத்தை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தை தற்போது ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 2 ஆயிரம் மினி கிளினிக்குகளையும் மூடப்பட்டுவிட்டது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்தார். இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், சொல்வதொன்று, செய்வதொன்று!
சொல்வதொன்று, செய்வதொன்று!
— K.Annamalai (@annamalai_k) January 4, 2022
ஆட்சி மாறினாலும் மக்களின் வரிப்பணத்தில் மக்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவது ஒரு அரசின் கடமை.
திமுக ஆட்சிக்கு வந்தபின் அம்மா மினி கிளினிக் திட்டத்தை படிப்படியாக முடக்கி, இப்பொழுது முழுவதுமாக முடக்கியதன் காரணம்? pic.twitter.com/EzjGz0RLlV
ஆட்சி மாறினாலும் மக்களின் வரிப்பணத்தில் மக்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவது ஒரு அரசின் கடமை.
திமுக ஆட்சிக்கு வந்தபின் அம்மா மினி கிளினிக் திட்டத்தை படிப்படியாக முடக்கி, இப்பொழுது முழுவதுமாக முடக்கியதன் காரணம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, முன்னாள் முதலமைச்சரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஏழை, எளிய மக்கள் கிராமப்புறங்களிலும்,நகரப் பகுதிகளிலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் துவங்கப்பட்டது.
ஏழை, எளிய மக்கள் கிராமப்புறங்களிலும்,
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) January 4, 2022
நகரப் பகுதிகளிலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் துவங்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு மாண்புமிகு அம்மா அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற ஒரே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், (1/2) pic.twitter.com/1D0NCuN6WL
இத்திட்டம் இந்த விடியா அரசால் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) January 4, 2022
ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதை இந்த விடியா அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.(2/2) pic.twitter.com/VjjzSJGyGY
இத்திட்டத்திற்கு மாண்புமிகு அம்மா அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற ஒரே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இத்திட்டம் இந்த விடியா அரசால் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது. ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதை இந்த விடியா அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்