மேலும் அறிய

உதவி வனப்பாதுகாவலர் தேர்வு; அனைத்து பொறியியல் பட்டதாரிகளையும் அனுமதிக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை 

உதவி வனப்பாதுகாவலர் தேர்வுக்கு அனைத்து பாடப்பிரிவு பொறியியல் பட்டதாரிகளையும் டிஎன்பிஎஸ்சி அனுமதிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

உதவி வனப்பாதுகாவலர் தேர்வுக்கு அனைத்து பாடப்பிரிவு பொறியியல் பட்டதாரிகளையும் டிஎன்பிஎஸ்சி அனுமதிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழ்நாடு அரசின் வனத்துறைக்கு உதவி வனப்பாதுகாவலர்களை (Assistant Conservator of Forests) தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிக்கையை நடப்பாண்டின் நவம்பர் மாதம் வெளியிடவிருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. இத்தேர்வில் பொறியியல் பட்டதாரிகளுக்கு இழைக்கப்பட்டு வரும் பாகுபாடு இம்முறையாவது நீக்கப்பட வேண்டும்.

தமிழக வனத்துறையில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், தலைமை வனப் பாதுகாவலர், வனப்பாதுகாவலர் ஆகியவற்றுக்கு அடுத்த நிலையில்  உள்ள உதவி வனப்பாதுகாவலர் பணிக்கான போட்டித் தேர்வுகள் கடைசியாக கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டு, டிசம்பர் மாதம் நடத்தப்பட்டன.

அதன்பின் 5 ஆண்டுகள் கழித்து வரும் நவம்பர் மாதம் இப்பணிக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிக்கை வெளியாவது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், கடந்த காலங்களைப் போலவே இம்முறையும் பொறியியல் மாணவர்களுக்கு இத்தேர்வில் பங்கேற்கும் வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

உதவி வனப்பாதுகாவலர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் 8 வகை இளம் அறிவியல் (பி.எஸ்சி) படிப்புகள், 8 வகை பொறியியல் படிப்புகள் உள்ளிட்ட 21 வகையான பட்டப்படிப்புகள் மட்டும்தான் அடிப்படைத் தகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், பிற அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டங்களைப் பெற்றவர்கள் இந்தப் போட்டித் தேர்வில் பங்கேற்க முடியாது. பிற அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகளை இந்தப் பணிக்கு அனுமதிப்பதில்லை என்பது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தவறான புரிதலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுதானே தவிர, அதை நியாயப்படுத்துவதற்கு வலுவான காரணங்களோ, ஆதாரங்களோ தேர்வாணையத்திடம் இல்லை.

எடுத்துக்காட்டாக வன நிர்வாகத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லாத இளம் அறிவியல் கணிதம், புள்ளியியல் படித்தவர்களும், கணினி அறிவியல், மின்னியல், மின்னணுவியல், சிவில் ஆகிய பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவர்களும் இதற்கான தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், வனத்துடன் தொடர்புடைய மற்ற பொறியியல் பட்டங்கள் இப்பணிக்குத் தகுதியற்றவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

உதவி வனப்பாதுகாவலர் தேர்வு; அனைத்து பொறியியல் பட்டதாரிகளையும் அனுமதிக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை 

கணிதம், புள்ளியியல் படிப்புகளில் பட்டம் பெற்றவர்கள் 10 அல்லது 12ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களைப் படித்திருந்தால் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க முடியும் என்று கூறுகிறது. ஆனால், இதே பாடங்களை பொறியியல் படிப்பில் படித்த செராமிக் தொழில்நுட்பம்,  தொழில்துறை உயிரி தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம், உணவு தொழில்நுட்பம், துணி தொழில்நுட்பம், ரப்பர் தொழில்நுட்பம் உள்ளிட்ட பொறியியல் பட்டதாரிகள் இந்தத் தேர்வில் பங்கேற்க முடியாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. இது எந்த வகையில் நியாயம்?

கணிதம், புள்ளியல் பட்டம் பெற்றவர்கள் 10 அல்லது 12-ஆம் வகுப்புகளில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களைப் படித்திருந்தால், அவர்களால் உதவி வனப்பாதுகாவலர் பணியை சிறப்பாகச் செய்ய முடியும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் நம்புகிறது. தமிழ்நாட்டில் எந்தப் பட்டப்படிப்பு  படித்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக பத்தாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களை படித்திருப்பார்கள். அதனடிப்படையில், எந்த ஒரு பட்டப்படிப்பு படித்தவர்களையும்  உதவி வனப்பாதுகாவலர் பணிக்கான போட்டித் தேர்வில் பங்கேற்க அனுமதிப்பதில் தவறு இல்லை.

உதவி வனப்பாதுகாவலர் பணியைவிட உயர்ந்த தகுதி நிலை கொண்ட பணிகளுக்காக இந்திய வனப் பணித் தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. அதை விடக் குறைந்த தகுதி நிலை கொண்ட வனத்தொழில் பழகுனர் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும், வனவர் தேர்வை வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வாணையமும் நடத்துகின்றன. இந்த அனைத்துத் தேர்வுகளிலும்  ஏதேனும் ஒரு பொறியியல் பட்டம் பெற்றவர்கள் பங்கேற்கலாம்.

அவ்வாறு இருக்கும்போது அதே மாதிரியான பணித் தன்மையைக் கொண்ட உதவி வனப்பாதுகாவலர் பணிக்கு மட்டும் அறிவியல் சார்ந்த பொறியியல் படிப்புகளும், தொழில்நுட்பப் படிப்புகளும் மறுக்கப்படுவது சமூக அநீதி. அதுமட்டுமின்றி இது சமவாய்ப்புக் கொள்கைக்கும், சம நீதிக் கொள்கைக்கும் எதிரான நிலைப்பாடாகும்.

எனவே, வரும் நவம்பர் மாதம் தமிழக அரசுப் பணி குரூப் 1ஏ-வில் வரும் உதவி வனப்பாதுகாவலர் பணிக்கான போட்டித் தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடும்போது எந்தவொரு பொறியியல் பட்டம் பெற்றவரும் அதில் பங்கேற்கலாம் என்று அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக தேர்வாணையத்திற்கு அரசும், வனத்துறையும் உரிய பரிந்துரைகளை வழங்க வேண்டும்’’.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget