'கலைஞருக்கு நோ’.. 'ஷார்ட் கட்டால் ஷாக்கான அதிமுகவினர்.! குழப்பிவிட்ட பொன்விழா மலர்!
பொன்விழாவை அதிமுகவினர் சிறப்பாக கொண்டாடினர். அதற்காக பொன்விழா சிறப்பு மலரெல்லாம் வெளியிடப்பட்டது.
அதிமுகவின் பொன்விழா சிறப்பு மலரில் எம்ஜிஆரைப் புகழும் ஒரு வார்த்தையில் 'கருணாநிதி' வந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கலைஞர் என்பதை தவிர்க்க போய் இப்படி எக்குத்தப்பாய் சிக்கியுள்ளனர். அஇஅதிமுகவின் 50-வது ஆண்டு பொன்விழா அக்டோபர் 17ம் தேதி கொண்டாடப்பட்டது. 1972-ஆம் ஆண்டு அக்டோபர் 17ல் தான் எம்ஜிஆர் "அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற மகத்தான இயக்கத்தை தொடங்கினார். அதனால் இந்த பொன்விழாவை அக்கட்சியினர் சிறப்பாக கொண்டாடினர். அதற்காக பொன்விழா சிறப்பு மலரெல்லாம் வெளியிடப்பட்டது.
சிறப்பு மலர் வெளியிடப்பட்ட அன்று வைரலாகாத ஒரு பக்கம் இன்று வைரலாகி வருகிறது. அந்தப் பக்கத்தில் எம்ஜிஆரை புகழும் விதமாக ’எம்ஜிஆர் ஒரு தேர்ந்த புகைப்படக் கருணாநிதி’ என டைப் செய்யப்பட்டுள்ளது. இது படிப்போரை குழப்பிவிட்டது. ’புகைப்படக் கலைஞர்’ தானே வர வேண்டும்? அது என்ன ’புகைப்படக் கருணாநிதி’ என வந்துள்ளது. கலைஞர் என்ற வார்த்தையை அதிமுக பயன்படுத்தாதோ என பலரும் கிண்டலாக கேள்வி எழுப்பினர்.
இது கணினியில் செய்த ஒரு ஷார்ட்கட் மூலம் ஏற்பட்ட குழப்பமாகவே இருக்கும் என கூறப்படுகிறது. டாக்குமெண்டில் ஒரு நீண்ட கட்டுரையில் ஒரு வார்த்தைக்கு பதிலாக இன்னொரு வார்த்தை வர வேண்டுமென்றால் Replace என்ற கீ பயன்படுத்துவார்கள். பெரிய கட்டுரையில் உள்ள குறிப்பிட்ட வார்த்தையை மட்டும் தேட முடியாது என்பதால் இந்த கீ. இதனை பயன்படுத்தி கலைஞர் என்ற இடத்திலெல்லாம் கருணாநிதி என்பதை பொன்விழா மலரை உருவாக்கியவர்கள் மாற்றி இருப்பார்கள். இதனால் ’புகைப்படக் கலைஞர்’ கூட ’புகைப்படக் கருணாநிதி’ என மாறிவிட்டது. இந்த குழப்பம்தான் இன்றைய இணைய வைரலாகியுள்ளது.
மேலும் அரசியல் செய்திகளைப் படிக்க..

மரக்காணம் : முதலியார் குப்பத்தில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர்..#IllamThediKalvihttps://t.co/gxflzJiPQX
— ABP Nadu (@abpnadu) October 27, 2021

ஓமலூரில் அதிமுகவினருடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்ட ஈபிஎஸ்- சங்கரமடத்தில் இருந்து வந்த ராமர் பாதம்https://t.co/uK4sCCoFy6#ADMK #EPS #UrbanLocalElectio #Sankaramadam
— ABP Nadu (@abpnadu) October 27, 2021

#JUSTIN | இல்லம் தேடி கல்வி திட்டம் என்ன விளைவை எற்படுத்தும் என்பதை தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும்

- சி.பி.ஐ. மாநில செயலாளர் முத்தரசன் https://t.co/wupaoCQKa2 | #CPI | #MKStalin | #DMK | #anbilmahesh pic.twitter.com/H7ER1gJCfz
— ABP Nadu (@abpnadu) October 27, 2021