மேலும் அறிய

Madhusudhanan Passed Away | அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்..

அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க. கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் அவைத்தலைவருமானவர் மதுசூதனன், 80 வயதான அவர் கடந்த சில தினங்களாக கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், அவர் இன்று அவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அ.தி.மு.க. அவைத் தலைவரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமானவர் மதுசூதனன். 80 வயதான அவர் எம்..ஜி.ஆர். 1972ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியதிலிருந்து அவருடன் பயணித்தவர்.  மதுசூதனன் கட்சி வழியாக அறியப்பட்டது 1972க்குப் பிறகுதான் என்றாலும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் மன்றத்தலைவர் மது அண்ணன் என்பதுதான் இவரது ஆதிகால அடையாளம். பின்பு கட்சியினரிடையேயும் மது அண்ணன் என்கிற பெயரே இவருக்கு நிலைத்துப்போனது. எம்.ஜி.ஆரால் கட்சிக்கு அழைத்துவரப்பட்டவர், பின் கட்சியின் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 

Madhusudhanan | எம்.ஜி.ஆரின் ரசிகர்.. ஜெயலலிதாவின் நிரந்தரப் பாதுகாவலர்!- யார் இந்த மதுசூதனன்?

எம்.ஜி.ஆரின் இறப்புக்குப் பிறகு அ.தி.மு.க. ஆட்டம் கண்டபோது நங்கூரமென இருந்து அது கவிழ்ந்துவிடாமல் காத்தவர் மதுசூதனன். எம்.ஜி.ஆர். இறப்புக்குப் பிறகு கட்சி ஜானகி அணி. ஜெயலலிதா அணி எனப்பிரிந்த காலத்தில் ஜெயலலிதா அணியைத் தேர்ந்தெடுத்தார். சிலர் வெளிப்படையாகவே ஜெயலலிதாவுக்கு மிரட்டல் விடுத்த காலத்தில் சுமார் ஒருவார காலம் போயஸ் தோட்டத்துக்குக் காவல் இருந்தார். அந்தக்காவல் 1989ல் சட்டசபைக் கலவரத்தின்போது சட்டமன்றம் வரை நீடித்தது. 

இதே மதுசூதனன்தான் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு பன்னீர்செல்வத்தின் பக்கத்தைத் தேர்ந்தெடுத்தார். 2007ம் ஆண்டுமுதல் கட்சியின் அவைத்தலைவராக இருந்துவரும் மதுசூதனனை பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்ததன் காரணமாகக் அவைத்தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கினார் சசிகலா. 


Madhusudhanan | எம்.ஜி.ஆரின் ரசிகர்.. ஜெயலலிதாவின் நிரந்தரப் பாதுகாவலர்!- யார் இந்த மதுசூதனன்?

 

கட்சியில் மாவட்டச் செயலாளராகத் தன் பயணத்தைத் தொடங்கிய மதுசூதனன் 1991-ஆம் ஆண்டில் ஆர்.கே.நகர் தொகுதியிலிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991ல் ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையிலேயே கைத்தறித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அந்தக் காலக்கட்டத்தை சென்னையின் கலவரக்காலம் எனலாம். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சுப்பிரமணியன் சுவாமி மீது அதிமுகவினர் நடத்திய தாக்குதல்,ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீதான ஆசிட் வீச்சு சம்பவம், தராசு ஊழியர் படுகொலை, ப.சிதம்பரம் வாகனம் மீது தாக்குதல், அண்ணா பல்கலை. துணை வேந்தராக அப்போது பதவி வகித்த முனைவர் அனந்தகிருஷ்ணன் வீடு மீது தாக்குதல், வக்கீல் விஜயன் மீதான கொலைவெறி தாக்குதல், மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரத்தின் மீதான தாக்குதல் என வன்முறைத் தாக்குதல்கள் ஒவ்வொன்றிலும் மதுசூதனன் பெயரும் அடிபட்டது. 2000ம் ஆண்டில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட மதுசூதனன், பின்னர் 2010ம் ஆண்டு ஜெயலலிதாவால் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

 

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget