AIADMK: ஓ.பி.எஸ். நடத்துவது ஒரு கம்பெனி; அவரால் கவுன்சிலர் கூட ஆக முடியாது - ஜெயக்குமார் கடும் விமர்சனம்..!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நடத்துவது ஒரு கம்பனி, அவரால் ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியாது என மிகக் கடுமையாக ஜெயக்குமார் சாடியுள்ளார்.
![AIADMK: ஓ.பி.எஸ். நடத்துவது ஒரு கம்பெனி; அவரால் கவுன்சிலர் கூட ஆக முடியாது - ஜெயக்குமார் கடும் விமர்சனம்..! AIADMK: OPS is run by a company; He cannot even become a councillor; Jayakumar hit hard AIADMK: ஓ.பி.எஸ். நடத்துவது ஒரு கம்பெனி; அவரால் கவுன்சிலர் கூட ஆக முடியாது - ஜெயக்குமார் கடும் விமர்சனம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/11/8294338bca9f920a70ca3f7873527b9b1668146634171102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, "ஓ.பன்னீர்செல்வம் நடத்துவது ஒரு கம்பனி, அவரால் ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியாது. 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி. பழனிசாமி தலைமையிலான கூட்டணிதான் அமையும். எங்களை நோக்கி தான் மற்ற கட்சிகள் வருவார்கள், நாங்கள் யாரிடமும் போய் நிக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்களை நோக்கிதான் மற்றவர்கள் வருவார்கள். நாங்கள் தருவதுதான் சீட் (தொகுதி).
ஓ.பன்னீர்செல்வத்திற்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை. அவர் கட்சி வேட்டி கட்டுவதையும், கொடியை பயன்படுத்துவதையும், கட்சியின் லெட்டர் பேட், கட்சியின் சீல் பயன்படுத்துவதை எப்படி அனுமதிக்க முடியும்? அதனால் தான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவர் நடத்துவது கட்சி கிடையாது, அவர் நடத்துவது ஒரு கம்பெனி. தனிக்கட்சி தொடங்கினால் அவரால் ஒரு கவுன்சிலர் கூட ஆகமுடியாது. இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)