மேலும் அறிய

விருதுநகர் பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த 30,000 ஆண்டு பழமையான நுண்கற்கருவிகள்... ஆச்சரியமூட்டும் தொல்லியல் கண்டுபிடிப்பு!

30,000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்த பகுதியாக இருந்ததை அறிந்துகொள்ள மாணவர்கள் கண்டெடுத்த தொல்பொருட்கள் உதவியுள்ளன. - எனவும் பெருமையுடன் தெரிவித்தார்.

கருப்பு சிவப்பு பானை ஓடுகள், கவண்கல், இரும்புப் பொருட்கள் கி.மு.4,000 முதல் கி.மு.700 வரையிலான இரும்புக்காலத்தில் பயன்பாட்டில் இருந்தவை. இரும்புத்தாதுக்கள், இரும்பு அம்புமுனைகள் கிடைத்துள்ளதால் இரும்பு உருக்கும் தொழில் இங்கு நடந்திருக்கலாம். 

விருதுநகர் அருகே 30,000 ஆண்டு பழமையான நுண்கற்கருவிகளைக் கண்டெடுத்த பள்ளி மாணவர்கள்
 
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், முத்தனேரி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 30,000 ஆண்டுகள் பழமையான நுண்கற்கருவிகளைக் கண்டெடுத்துள்ளனர். பள்ளியில் செயல்படும் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் மூலம் பள்ளித் தலைமையாசிரியர் க.அன்புவேலன், தொல் பொருட்கள், கல்வெட்டுகளை அடையாளம் காண மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார். இதன் எதிரொலியாக 5-ம் வகுப்பு முத்துமுருகன், 6-ம் வகுப்பு அக்‌ஷயா, வாணிஸ்ரீ, முகில்ராஜன், மணிகண்டன், 7-ம் வகுப்பு ராகுல், 8-ம் வகுப்பு அபி, ஜெனிகா ஆகியோர் தங்கள் வீட்டுக்கு அருகிலும், புதுக்கண்மாயிலும் கிடந்த பானை ஓடுகள், கற்கருவிகளை மேற்பரப்பாய்வில் கண்டெடுத்துத் தலைமையாசிரியரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி அவர் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, கற்கருவிகளையும், அப்பகுதியையும் நேரில் ஆய்வு செய்தார். இதுபற்றி வே.ராஜகுரு கூறியதாவது,
 
ஆறு திசைமாறி ஓடிய தடம் உள்ளது
 
நுண்கற்கருவிகள், இரும்புத் தாதுக்கள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள், சிவப்பு பானை ஓடுகள், கவண்கல், குறியீடு உள்ள பானை ஓடு, சுடுமண் கெண்டியின் நீர் ஊற்றும் மூக்குப்பகுதி, இரும்பாலான அம்பு முனைகள், பாண்டி ஆட்டத்துக்குப் பயன்படுத்திய வட்டச்சில்லுகள் ஆகியவற்றை மாணவர்கள் கண்டெடுத்துள்ளனர். இவை இடைக்கற்காலம், இரும்புக் காலம், வரலாற்றின் இடைக்காலத்தைச் சேர்ந்தவை. இடைக்கற்காலம் கி.மு.38,000 முதல் கி.மு.7,000 வரையிலானது. இப்பகுதிகளில் கிடைக்கும் செர்ட், குவார்ட்ஸ், ஜாஸ்பர் போன்ற மிருதுவான கற்களால் செய்யப்பட்ட அளவில் சிறிய நுண்கற்கருவிகள் இக்கால மக்களால் பயன்படுத்தப்பட்டன. இவற்றை மரக்கம்புகளின் நுனியில் பொருத்தி அம்புமுனைகள், சிறுகத்திகள், சுரண்டிகளாக வேட்டையாடப் பயன்படுத்தியுள்ளனர். இவர்கள் ஆறு, ஓடைகளின் அருகில் வாழ்ந்துள்ளனர். இவ்வூரில் ஓடை அல்லது ஆறு திசைமாறி ஓடிய தடம் உள்ளது. அர்சுனா, வைப்பாறு, கிருதுமால், குண்டாறு ஆகிய ஆற்றுப்பகுதிகளில் நுண்கற்கருவிகள் கிடைத்திருக்கின்றன. கருப்பு சிவப்பு பானை ஓடுகள், கவண்கல், இரும்புப் பொருட்கள் கி.மு.4,000 முதல் கி.மு.700 வரையிலான இரும்புக்காலத்தில் பயன்பாட்டில் இருந்தவை. இரும்புத்தாதுக்கள், இரும்பு அம்புமுனைகள் கிடைத்துள்ளதால் இரும்பு உருக்கும் தொழில் இங்கு நடந்திருக்கலாம். சிவப்பு பானை ஓடுகள் வரலாற்றின் இடைக்காலத்தைச் (கி.பி.300 – கி.பி.1,300) சேர்ந்தவை. ஒரு சிவப்பு பானை ஓட்டில் அச்சு பதித்தது போன்ற பூ, பறவை குறியீடுகள் உள்ளன. இவ்வூர் சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்த பகுதியாக இருந்ததை அறிந்துகொள்ள மாணவர்கள் கண்டெடுத்த தொல்பொருட்கள் உதவியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
 
தலைப்பு செய்திகள்

ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Embed widget