Watch Video: சுட்டிகளுடன் குட்டிப்பயணம்.. ஸ்கூல் வாகனமாக மாறிய விஜயபாஸ்கர் கார்.! ஜாலி ட்ரிப்!
பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த குழந்தைகளை தனது காரில் ஏற்றிக்கொண்டு இறக்கிவிட்டு சாக்லெட்டுகளை வழங்கியுள்ளார் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

சூரியூர் ஊராட்சி சீத்தப்பட்டியில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பள்ளி சிறுவர்களை தனது காரில் ஏற்றிக்கொண்டு இறக்கிவிட்டு சாக்லெட்டுகளை வழங்கியுள்ளார் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கமான ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு, “விராலிமலை தொகுதியில் பல்வேறு நிகழ்வுகளை முடித்துக்கொண்டு இலுப்பூர் திரும்பும் வழியில் சூரியூர் ஊராட்சி சீத்தப்பட்டியில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த குழந்தைகளைக் கண்டேன். உடனே அவர்களை எனது காரில் ஏற்றிக்கொண்டேன். அவர்களோடு உரையாடியது கலகலப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.அவர்களது வீடுகளில் கொண்டு இறக்கிவிட்டு அவர்களுக்கு சாக்லேட்கள் வழங்கினேன். மிகச்சிறந்த மகிழ்வான தருணம் சுட்டிகளோடு அமைந்த இந்த குட்டிப் பயணம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

