மேலும் அறிய

நடிகை சாந்தினியின் பாலியல் வன்குற்றப் புகார் : அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது..!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி, ஐந்து ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்து வந்ததாகவும், மேலும் இந்த காலகட்டத்தில் தான் 3 முறை கருவுற்று, அதை கலைத்ததாகவும் நடிகை சாந்தினி புகாரை அளித்தார்

தமிழ் சினிமா நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். 

மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படியில், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையம் பாலியல் பலாத்காரம், ஏமாற்றுதல், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், பெண்ணின் அனுமதியின்றி கருக்கலைப்பு என பிரிவு 313, பிரிவு 323, பிரிவு 417, பிரிவு 506 ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. 

நடிகை சாந்தினியின் பாலியல் வன்குற்றப் புகார் : அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது..!

தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி தெரிவித்தார். தன்னுடன் மூன்று ஆண்டுகள் ஒரே வீட்டில் வசித்ததாகவும், அவரால் தான் மூன்று முறை கருவுற்றதாகவும், அவரது கட்டாயத்தினால் அந்த கருவை கலைத்ததாகவும் புகாரில் தெரிவித்தார்.     

இதற்கிடையே, முன்ஜாமீன் கோரி அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்னாள் அமைச்சர் என்பதால் மணிகண்டன் ஆதாரங்களை அழிக்க நேரிடும் என்பதால் முன்ஜாமீன் வழங்க நடிகை சாந்தினி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனையடுத்து, மணிகண்டன் தலைமறைவானார். மதுரை,ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் போலீசார் அவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து, தலைமறைவாக இருந்த மணிகண்டனை பிடிக்கும் முயற்சியில் சென்னை காவல்துறை தீவிரப்படுத்தியது. இதற்காக,2  சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு  தேடுதல் வேட்டை துரிதப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று காலை இந்நிலையில், பெங்களூரில் தங்கி இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை சிறப்பு தனிப்படை  கைது செய்தது. தற்போது, ரகசிய இடத்தில் வைத்து மணிகண்டனை போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.     

Manikandan Case: மாஜி அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு தள்ளுபடி; கைதாக வாய்ப்பு?

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். அதிமுக ஆட்சியில் இருக்கும்போதே இவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியதுடன், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் மறுக்கப்பட்டது.  

நடிகை சாந்தினியின் பாலியல் வன்குற்றப் புகார் : அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது..!

முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மணிகண்டன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மணிகண்டன் திருமணமானவர் என தெரிந்து தான் அவருடன் நடிகை சாந்தினி குடும்பம் நடத்தியுள்ளதாக தெரிவித்தார். நடிகையை காயப்படுத்தியதாக கூறுவதற்கு எந்த மருத்துவ ஆதாரங்களும் இல்லை எனவும் வாதிட்டார். மேலும், அறிமுகம் ஆன மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்ததாக காவல்துறை தெரிவிப்பது தவறானது எனவும் கூறினார்.  

விசாரணை தற்போது ஆரம்ப கட்டத்தில்  உள்ள நிலையில், சாந்தினி மற்றும் மருத்துவர்களின் வாக்குமூலங்களை பெறுவதற்கான முயற்சிகளை சென்னை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.   

சமூக வலைதளங்களில் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படங்களை வெளியிடுவேன்

கடந்த 2019ஆம் ஆண்டு மாஜி அமைச்சர் அவருடைய உரையை சட்டமன்றத்தில் நிகழ்த்தியபோது நான் அவருடைய மனைவி என்ற முறையில் சட்டமன்றத்தை பார்வையிட அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget