AIADMK: அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்திய விவகாரம்.. இபிஎஸ் தொடந்த வழக்கு இன்று விசாரணை..!
அதிமுக கொடி மற்றும் சின்னம் விவகாரம் தொடர்பாக வழக்கு இன்று விசாரணைக்கு வருவதால் பெரும் எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.
அதிமுக கொடி மற்றும் சின்னம் விவகாரம் தொடர்பாக வழக்கு இன்று விசாரணைக்கு வருவதால் பெரும் எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி வகித்து வருகிறார். அவர் சார்ந்த கட்டுப்பாட்டில் கட்சி வந்த பிறகும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாங்கள் தான் உண்மையான அதிமுக எனக்கூறி வருகிறது. உச்சநீதிமன்றம் வரை சென்றாலும் தீர்ப்புகள் ஓபிஎஸ் தரப்புக்கு எதிராகவே அமைந்தது. அதேசமயம் அறிக்கைகளில் கூட ஓ.பன்னீர்செல்வம் பெயரின் கீழ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்றே வெளியாகிறது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
அவர் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், ‘அதிமுகவின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இதுதொடர்பான உரிமையியல் வழக்கில் பொதுச்செயலாளர் என தன்னை தேர்தல் ஆணையமும், உயர்நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது. ஆனால் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். இது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
எனவே அதிமுகவின் கட்சியின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சியின் கொடியையோ கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும். பிரதான வழக்கின் விசாரணை முடியும் அவரை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கட்சி பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையானது கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது.
அப்போது, ‘ உச்சநீதிமன்றம் வரை 4 முறை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேரை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் என்ற தீர்மானம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்சி லெட்டர்பேடை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகிறார்கள் என வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கால அவகாசம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட வழக்கு விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மேலும் படிக்க: PM Modi Mizoram Election: 9 ஆண்டுகளில் முதல் முறை, மிசோரம் தேர்தல் பரப்புரைக்கு செல்லாத பிரதமர் மோடி- மணீப்பூரால் வந்த வினை