மேலும் அறிய

Benjamin: அன்று இபிஎஸ் பதவியை பறித்ததாக கண்ணீர்.. இன்று திமுகவில் ஐக்கியம்.. கட்சி மாறிய பெஞ்சமின்!

அதிமுக அரசில் அமைச்சராக பணியாற்றிய பெஞ்சமின் திமுகவில் இணைந்துள்ளார். கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் மதுரவாயல் தொகுதியில் அதிமுக சார்பில் பெஞ்சமின் போட்டியிட்டார். ஆனால் தேர்தலில் தோற்று 3ம் இடம் பெற்றார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தன் ஆதரவாளர்களோடு திமுகவில் இணைந்த சம்பவம் எடப்பாடி பழனிசாமிக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. 

அதிமுகவை விட்டு வெளியேறும் முன்னாள் அமைச்சர்கள்

2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பின் தமிழக அரசியல் களத்தில் நிகழும் மாற்றங்கள் ட்விஸ்ட் நிறைந்த ஒன்றாக அமைந்துள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் முதல்முறை போட்டியிட்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்தது. அதேசமயம் திமுக எதிர்க்கட்சியாகவும், அதிமுக  3ம் இடத்திற்கும் தள்ளப்பட்டது. தேர்தலுக்குப் பின் அதிமுகவில் மிகப்பெரிய அளவில் பிளவு ஏற்பட்ட நிலையில் பலரும் அக்கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 எம்.எல்.ஏ.,க்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துக் கொண்டனர். 

இந்த நிலையில் அதிமுகவில் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவி வகித்த உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ, என்.ஆர். சிவபதி மற்றும் வெல்லமண்டி நடராஜன், எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் கூட்டாக தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த வாரம் இணைந்தனர். இது எடப்பாடி பழனிசாமி தரப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 

அன்று கண்ணீர்.. இன்று மகிழ்ச்சி

இந்த நிலையில் அதிமுக அரசில் அமைச்சராக பணியாற்றிய பெஞ்சமின் திமுகவில் இணைந்துள்ளார். கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் மதுரவாயல் தொகுதியில் அதிமுக சார்பில் பெஞ்சமின் போட்டியிட்டார். ஆனால் தவெக சார்பில் போட்டியிட்ட ரேவந்த் சரணிடம் அவர் தோல்வியுற்று இந்த தேர்தலில் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்த தோல்வியை பெஞ்சமின் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

இதனிடையே தேர்தலுக்குப் பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்ட நிலையில் தனக்கு எதிராக செயல்பட்டவர்களை கட்சியில் இருந்து நீக்காமல் அவர்களின் பதவிகளை மட்டும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்தார். அதில் பெஞ்சமின் பெயரும் இடம் பெற்றிருந்தது. 

ஆனால் இந்த தேர்தலில் பெஞ்சமின் ஜெயிக்கவில்லை. அவருடைய பதவியைப் பறித்தது பெரும் குழப்பமாக அமைந்தது. இதற்கிடையில் திடீரென சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் சென்று தனது ஆதரவாளர்களுடன் பெஞ்சமின் தியானம் மேற்கொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கண்ணீர் விட்டு கதறி அழுதார். தான் எந்த தவறும் செய்யவில்லை. தேர்தல் தோல்வியால் நான் ஊரிலேயே இல்லை. இந்த இயக்கத்துக்கு நான் என்ன துரோகம் செய்தேன் என பல கேள்விகளையும் எழுப்பினார். அதிமுக கட்சிக்கொடி, சின்னம் யார் பக்கம் இருக்குமோ அங்கு தான் நானும் இருப்பேன் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அம்மா இருந்தால் இதெல்லாம் நடக்குமா? - கட்சியை விட்டு நீக்கிய இபிஎஸ்.. கதறி அழுத பெஞ்சமின்!

இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அவரை சமாதானப்படுத்தினார். ஆனால் பெஞ்சமினிடம் இருந்து பறிக்கப்பட்ட பதவி திரும்ப வழங்கப்படவில்லை. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைந்துள்ளார். 

தவெக செல்லாததற்கு காரணம் இதுதான்

ஆட்சியிலும் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொண்டர்களை மு.க.ஸ்டாலின் அரவணைத்து செல்லக்கூடியவர். அதிமுகவுக்கு எப்படி உண்மையாக இருந்தேனோ, அதேபோல் திமுகவுக்கும் விசுவாசமாக இருப்பேன். இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல் சூழல், மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தான் திமுகவில் இணைந்திருக்கிறேன். நாங்கள் களப்பணியாற்றி பழக்கப்பட்டவர்கள். அதனால் எதிர்க்கட்சியாக இருந்தாலும் நான் திமுகவில் இணைந்துள்ளேன் என பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

"தாய் மாமன் விஜய் என்ன சொல்லப்போறாரு?" - 19 வயது இளைஞர் படுகொலையால் கொந்தளித்த சீமான்
வானிலை வார்னிங்: சென்னையில் இன்று இடியுடன் மழை; நீலகிரி, தேனிக்கு 2 நாட்கள் கனமழை
வானிலை வார்னிங்: சென்னையில் இன்று இடியுடன் மழை; நீலகிரி, தேனிக்கு 2 நாட்கள் கனமழை
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget