மேலும் அறிய

"தாய் மாமன் விஜய் என்ன சொல்லப்போறாரு?" - 19 வயது இளைஞர் படுகொலையால் கொந்தளித்த சீமான்

தன்னை, ‘தாய் மாமன்’ எனக் கூறிக் கொள்ளும் முதல்வர் விஜய், படுகொலை செய்யப்பட்டு இறந்துபோன 19 வயது பிள்ளையின் மரணத்துக்கு தாய் மாமனாக என்ன சொல்லப் போகிறார்? - சீமான்

போதைப்பொருட்களின் பழக்கம் குறித்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்த கோவை மாணவர் அமுதனின் படுகொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி, மூடி மறைப்பதா? என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்களாலேயே அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி தருகிறது. நட்பையும், நல்லொழுக்கத்தையும் கற்றுத்தர வேண்டிய வேண்டிய கல்விக்கூடங்களிலேயே மாணவர்களிடையே பகைமையும், வெறுப்பும், போதைப்பழக்கமும் உருவாகி, அது ஒரு உயிரைப் போக்கும் நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருப்பது எதிர்கால தலைமுறையினர் குறித்தான அச்சத்தை ஏற்படுத்துகிறது. தம்பி அமுதனை இழந்து, ஆற்ற முடியாதப் பெருந்துயரத்தில் சிக்குண்டு வாடும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். கல்லூரி வளாகத்தில் நிலவும் போதைப்பொருட்களின் புழக்கம் குறித்துக் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்ததாலேயே மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்டதாக, அவரது பெற்றோர் முன்வைக்கும் குற்றச்சாட்டு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
 

 
கோவை, செட்டிப்பாளையம் காவல்நிலையத்திற்கு மாணவர் அமுதன் அழைத்துச் செல்லப்பட்டு, அவரிடமிருந்து போதைப்புழக்கம் குறித்தத் தகவல்களைக் காவல்துறையினர் பெற்றுள்ளனர் என்பதும், அதற்குப் பிறகே, ஏறக்குறைய 20 மாணவர்களால் அமுதன் அடித்தே கொலைசெய்யப்பட்டிருக்கிறார் என்பதுமான செய்திகள் பெற்றோரின் குற்றச்சாட்டை உறுதிசெய்கின்றன. அப்படியிருக்கையில், போதைப் பொருட்களின் புழக்கம் எனும் முதன்மைக்காரணத்தை மூடி மறைத்து, மாணவர்களிடையேயான தகராறு என வழக்கின் கோணத்தையே மாற்ற முற்படும் தவெக அரசின் போக்கு அநீதிக்குத் துணைபோகும் துரோகம் இல்லையா? ‘குழு மோதல்’ எனக் கொஞ்சமும் கூச்சமில்லாது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சட்டமன்றத்தில் கூறியதெல்லாம் மோசடித்தனம் இல்லையா? 20 பேர் சேர்ந்து ஒருவரை அடித்துக் கொல்வதற்குப் பெயர் குழு மோதலா? அலைபேசி பறித்ததால் வந்த சண்டை, குழுமோதல் என்றால் மட்டும் இப்படுகொலை நியாயமாகிவிடுமா? இல்லை இது படுகொலையே இல்லை என்றாகிவிடுமா?
 
அரசு தன் மீது குற்றம் வந்துவிடக்கூடாது என்பதற்காக இன்னொரு கொடுங்குற்றத்தை மூடி மறைக்கலாமா? பறிபோன மாணவனின் உயிரைவிட உங்கள் ஆட்சியின் மீதான நற்பெயர்தான் முதன்மையானதா? பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் விற்பனையே இல்லை என்கிறதா அரசு? அண்மையில் ஒரு பள்ளியில் கஞ்சாபோதையில் சக மாணவனை தாக்கும் காணொளியை ஆட்சியாளர்கள் பார்க்கவில்லையா? பரப்புரைக்கூட்டங்களில் தன்னை, ‘தாய் மாமன்’ எனக் கூறிக் கொள்ளும் முதல்வர் விஜய், படுகொலை செய்யப்பட்டு இறந்துபோன 19 வயது பிள்ளையின் மரணத்துக்கு தாய் மாமனாக என்ன சொல்லப் போகிறார்? என்ன நீதியைப் பெற்றுத் தரப் போகிறார்? தனது மகனை இழந்தப் பரிதவிப்பில் பெருங்குரலெடுத்து ஓலமிடும் பெற்றோருக்கு என்ன சொல்ல விளைகிறார்? நடந்தவைகளை மூடி மறைத்து, பாதிக்கப்பட்ட தரப்பையே குற்றவாளியாகச் சித்தரிக்கும் வேலையைச் செய்கிறது கல்லூரி நிர்வாகம். போதைப்பொருட்களின் பயன்பாட்டுக்கும், இக்கொலை வழக்குக்கும் தொடர்பில்லை என உண்மையைக் கொன்றுப் புதைக்கிறது ஆளும் தவெக அரசு.
 
இதுவெல்லாம் வெளிப்படையாகக் செய்யப்படும் சனநாயகத்துரோகம் இல்லையா? வெட்கக்கேடு! பேரவலம்! ஆகவே, தம்பி அமுதனின் படுகொலையில் நீதிவிசாரணை செய்யப்பட்டு, தொடர்புடைய கொலையாளிகள் யாவரும் கைதுசெய்யப்பட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்கப்பட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

"தாய் மாமன் விஜய் என்ன சொல்லப்போறாரு?" - 19 வயது இளைஞர் படுகொலையால் கொந்தளித்த சீமான்
வானிலை வார்னிங்: சென்னையில் இன்று இடியுடன் மழை; நீலகிரி, தேனிக்கு 2 நாட்கள் கனமழை
வானிலை வார்னிங்: சென்னையில் இன்று இடியுடன் மழை; நீலகிரி, தேனிக்கு 2 நாட்கள் கனமழை
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget