சில உணவுகளை தவறான முறையில் சாப்பிடுவதால் அதன் முழு நன்மையும் கிடைக்காமல் போகலாம்.
கேரட் சாப்பிடும்போது அதனுடன் சிறிது நல்ல கொழுப்பு சேர்த்தால், அதில் உள்ள Vitamin A உடலுக்கு சரியாக கிடைக்க உதவும்.
சாப்பிட்ட உடனே Green Tea குடிப்பது உணவில் உள்ள இரும்புச்சத்து உடலில் சேர்வதை குறைக்கலாம். அதனால் டீ, காபிகளை சிறிது நேரம் கழித்து குடிப்பது நல்லது.
பழங்களை வெட்டி நீண்ட நேரம் வெளியே வைத்தால், அதில் இருக்கும் Vitamin C குறையலாம். ஃப்ரெஷ்ஷாக வெட்டி சாப்பிடுவது சிறந்தது.
கீரையில் இரும்புச்சத்து இருந்தாலும், அதிலுள்ள சில பொருட்கள் அது உடலில் சேர்வதை குறைக்கலாம். கீரையுடன் எலுமிச்சை சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
சுவையூட்டப்பட்ட தயிரில் அதிக சர்க்கரை இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே வெறும் தயிர் மட்டுமல்லாமல் அதனுடன் பழங்கள் மற்றும் நட்ஸ் சேர்த்து சாப்பிடுவது நல்லது
ஹெல்த்தியான உணவை வெறுமனே சாப்பிட்டால் போதாது. அதை சரியான முறையில் சாப்பிடுவதும் முக்கியம். சிறிய உணவு பழக்கங்களே நல்ல ஆரோக்கியத்திற்கு உதவும்.