மேலும் அறிய

EPS Meeting: ஓபிஎஸ்க்கு ஆதரவாக வந்த தீர்ப்பு: ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தும் இபிஎஸ்

EPS Meeting: அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பின் எதிரொலியாக இபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஜூலை 11 தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், பொதுக்குழு செல்லாது என இன்று (17/08/2022) தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பு அதிமுகவின் இடைகால பொதுச்செயளாலராக நியமிக்கப்பட்ட இபிஎஸ் மற்றும் அவரது தரப்பினருக்கு சாதகமற்ற தீர்ப்பு என்பதால், இபிஎஸ் தனது, ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டம் சென்னை பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ள இபிஎஸ் வீட்டில் நடந்து வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இபிஎஸ் ஆதரவாளர்களும் அதிமுக பொறுப்பாளர்களுமான செங்கோட்டையன், வளர்மதி மற்றும் பெஞ்சமின் ஆகியோறுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.  இதற்கு முன்னதாக, தீர்ப்பிற்குப் பிறகு ஓபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அதிமுக முன்னாள் பொதுச்செயளாலர்களும் முன்னாள் முதல்வர்களுமான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார். 

அதேபோல், இதற்கு முன்னர் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்த வழக்கில் ஜூன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலையே தொடரவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி, 2 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டது.

அதன்படி வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட போது, பன்னீர்செல்வம் தரப்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை நீதிபதிக்கு மனு அளிக்கப்பட்டது. இறுதியில் அந்த மனு திரும்பப் பெறப்பட்டதை தொடர்ந்து வழக்கில் புதிய நீதிபதியை நியமிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி.

அதை தொடர்ந்து புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், கடந்த 10 மற்றும் 11ம் தேதிகள் விசாரணை நடத்தி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்குகளில் நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று பிறப்பித்த உத்தரவில், ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். பொதுக்குழு மற்றும் செயற்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்றும், பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென கோரிக்கை வைத்தால், 15 நாட்களில் நோட்டீஸ் வெளியிட்டு, 30 நாட்களில் பொதுக்குழுவை இருவரும் இணைந்து கூட்ட வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இருவரும் இணைந்து கூட்டுவதில் சிக்கல் ஏற்படும்பட்சத்தில், பொதுக்குழு கூட்டும் நடைமுறையை கண்காணிக்க ஆணையரை நியமிக்கும்படி நீதிமன்றத்தை நாடலாம் என்றும் உத்தரவிட்டு உள்ளார். இதன் மூலம் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதால் அதிமுகவில் மீண்டும் காட்சிகள் மாறவிருக்கின்றன எனபது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்”தூங்குறவர வெட்டிட்டாங்க! 7 வயசுல குழந்தை இருக்கு” கதறி அழும் மனைவிஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
Embed widget