OPS With Bhagyaraj : ”அதிமுகவில் முறையா இணைஞ்சு செயல்படப்போறேன்”.. ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த இயக்குநர் பாக்யராஜ் பேச்சு..
சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நடிகர் பாக்யராஜ் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தை நடிகர் பாக்யராஜ் சந்தித்து பேசினார்.
மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை:
சென்னை தனியார் ஓட்டலில், விழுப்புரம், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன், ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தை நடிகர் பாக்யராஜ் சந்தித்து பேசினார்.
அதனை தொடர்ந்து ஓபிஎஸ், இயக்குநர் பாக்யராஜ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பாக்யராஜ், அதிமுகவில் முறையா இணைந்து செயல்படப்போவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக-வில் அனைவரும் ஒன்று சேர வேண்டும், முடிந்தால் நானே மற்ற உறுப்பினர்களை சந்தித்து பேசுவேன். அதிமுக-வில் அனைவரும் ஒன்றாக இணைவார்கள், ஆனால் சிறிது காலம் ஆகும் என பாக்யராஜ் தெரிவித்தார்.
ஓபிஎஸ் ஆலோசனை:
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் விழுப்புரம், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது இயக்குநர் பாக்யராஜ், ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மேலும் அனைத்து அதிமுக நிர்வாகிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஓபிஎஸ் அழைப்பு விடுத்ததை வரவேற்பதாக பாக்யராஜ் தெரிவித்தார்.
மேலும் அனைத்து அதிமுக நிர்வாகிகளும் ஒன்றிணைந்து அதிமுக-வை பலப்படுத்த வேண்டும் என்றும், முடிந்தால் தானே மற்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து, ஒன்றிணையுமாறு சமாதானம் பேசவுள்ளதாகவும் பாக்யராஜ் தெரிவித்தார்.
View this post on Instagram
“அதிமுகவில் சின்ன தொண்டனாக பணியாற்றுவேன்”.. பாக்யராஜ் பரபரப்பு பேட்டி https://t.co/wupaoCQKa2 | #bhagyaraj #ops #aiadmk #eps pic.twitter.com/l9ri1n2zIC
— ABP Nadu (@abpnadu) August 26, 2022