மேலும் அறிய

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம்: வயது வரம்பு கூடாது! - கி.வீரமணி

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டத்தில் வயது வரம்பை கருத்தில் கொள்ள கூடாது என முதல்வருக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகவேண்டும் என்ற தந்தை பெரியார் அவர்களின் கொள்கையை ஏற்று, முத்தமிழ் அறிஞர் கலைஞர் இரண்டுமுறை சட்டங்களை இயற்றினார். சாதகமான இந்தச் சூழ்நிலையில், அர்ச்சகர் பணி நியமனத்தில் வயது வரம்பைத் தளர்த்தி, பயிற்சி பெற்று பணி நியமனத்துக்காகக் காத்திருக்கும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்குப் பணி நியமனம் செய்யுமாறு திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில், கலைஞர் கொண்டு வந்து நிறைவேற்றிய அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் சமூகப் புரட்சிக்கு வித்திட்ட சட்டமாகும். தந்தை பெரியாரை ‘அரசு மரியாதை'யுடன் அடக்கம் செய்ய முடிந்த தனது ஆட்சியில், ‘அவர் நெஞ்சில் தைத்த முள்ளை'அகற்ற முடியவில்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் கருணாநிதி. 

கலைஞர் அரசின் விருப்பத்தை, கொள்கையை, அவரது ஆற்றல்மிகு பிள்ளையாக மனிதநேயத்தின் உருவமாக உள்ள மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தல் வாக்குறுதிப்படி, 'பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றும்' பெரும் பணியை நேர்த்தியாக செய்ய தி.மு.க. ஆட்சி இன்னும் சில வாரங்களில் ஆயத்தமாகிறது. கடந்த 14 ஆண்டுகளாக வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் 205 பேரில், இரண்டு, மூன்று பேர் இறந்துவிட்டனர் என்பது வேதனையான செய்தியாகும். எஞ்சியுள்ளவர்கள் எப்போது பணி நியமனம் என்ற ஏக்கத்தோடும், அதேநேரத்தில் நம்பிக்கையை இழக்காமலும் காத்திருக்கின்றனர்.

''கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின் மூலம் 2007-2008 ஆம் கல்வியாண்டில் முறையாக அர்ச்சகர் 'தீட்சை' பெற்றுள்ளோம். ஆகமம் கற்று தீட்சை பெற்றவர்களாகிய எங்களில் கவுண்டர், தேவர், வன்னியர், முதலியார், யாதவர், தேவேந்திரர், ஆதிதிராவிடர், அருந்ததியர், பார்ப்பனர் உள்பட அனைத்து ஜாதியினரும் உள்ளனர். 2020 ஆம் ஆண்டு (அ.தி.மு.க. ஆட்சியில்) உருவாக்கப்பட்ட தமிழ்நாடு அரசு விதிகளில், அர்ச்சகராவதற்கு வயது வரம்பு 35 ஆக (உச்சவரம்பு) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 14 ஆண்டுகள் பணி நியமனம் எங்களுக்கு கிடைக்காததற்கு நாங்கள் பொறுப்பாளி அல்ல. தற்போது அர்ச்சகர் பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியுடையவர்களாகிய எங்களில் 35 வயதிலிருந்து 40 வயது உள்ள மாணவர்களின் எண்ணிக்கை 76 பேர் (மூன்றில் ஒரு பகுதி) வயது வரம்பு தளர்வுகளைத் தரவில்லையானால், இந்த 79 பேரும் விண்ணப்பிக்கவே வாய்ப்பு கிட்டாத நிலை ஏற்படும். எனவே, 35 வயதுக்கு மேற்பட்டுள்ள - பணி நியமனத்திற்கு முன்பு, வயது வரம்பில் தளர்வு (ஒரு சிறப்பு விதிவிலக்காக இவர்களுக்கு மட்டும்) அளிக்கவேண்டும் என்ற அவர்களது கோரிக்கையில் மிகவும் நியாயம் உள்ளது.
பலருக்கும் மனிதாபிமானத்துடன் உதவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ற பெயர் எடுத்துள்ள நிலையில்,  இவர்களது வாழ்க்கையையும் மலரச் செய்து, 'நெஞ்சில் பால் வார்க்க' முன்வருதல் அவசரமும், மனிதநேயமுமாகும். பாரம்பரிய அர்ச்சகர் முறை ஒழிப்புச் சட்டம் அமுலுக்கு வந்து, உச்சநீதிமன்றம் ஏற்று, சுமார் 50 ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்றுவரை, மதுரை மீனாட்சியம்மன் கோவில், பழனி, திருச்செந்தூர் முருகன் கோவில்கள், சிறீரங்கம் ரங்கநாதர், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்கள் பரம்பரை முறை அர்ச்சகர்களே  தொடர்ந்து பணியில் இருப்பது சட்ட விரோதமானதல்லவா?
இதுபற்றி ஜஸ்டிஸ் ஏ.கே.ராஜன் குழு கொடுத்த அறிக்கையில் பல விரிவான தகவல்கள் கிடைக்கின்றன. எனவே, இந்த வேண்டுகோளை நிறைவேற்றி, நியமனங்களை நடத்திடுமாறு பாதிக்கப்பட்டவர்களின் பரிதாபக் குரலுக்குச் செவிமடுத்து, தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும், அறநிலையத் துறை அமைச்சரும் விரைந்து ஆவன செய்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget