மேலும் அறிய

"பம்மல் நேரு.. உங்களுக்கு அருகதையே இல்ல" வெளுத்து வாங்கிய எஸ்.பி. வேலுமணி!

பாஜகவுக்கு அச்சப்படும் கோழை என எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்த நிலையில், அதற்கு அதிமுகவின் எஸ்.பி. வேலுமணி பதிலடி அளித்துள்ளார்.

தெனாலி’யின் பயப் பட்டியலை விட பழனிசாமியின் பயப் பட்டியல் பெரியது என்றும் பாஜகவுக்கு அச்சப்படும் கோழை என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து காட்டமான கருத்துகளை பதிவிட்டு பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் அமைச்சர் கே.என்.நேரு.

அதற்கு பதிலடியாக காட்டமான விமர்சன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி. அதில், "அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி, மக்களின் குரலாக வீறுகொண்டு ஒலிப்பதைக்கண்டு அஞ்சி நடுங்கி, விடியா திமுக மந்திரி நேரு பெயரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது ஸ்டாலினின் திராவிட முன்னேற்றக் கழகம்.

"பம்மல் நேரு"

அச்சம் என்ற சொல்லே எடப்பாடி அகராதியில் கிடையாது. "மக்களுக்காக உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவோம்" என்று எடப்பாடி சட்டப் பேரவையில் கர்ஜித்த போது, எதிர் பக்கத்தில் இருந்த ஸ்டாலின் தலைமையிலான மொத்த திமுக கூட்டமும் பயந்து நடுங்கியதை தமிழ் நாட்டு மக்கள் பார்த்த பிறகும், எங்களைப் பார்த்து பயம் என்ற சொல்லை திமுக பயன்படுத்துவது வேடிக்கையின் உச்சம்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னால், பல நூறு கோடி ரூபாய் கடன்களுக்குச் சொந்தக்காரர்களான உங்களுடைய குடும்பத்திற்கு, தற்போது அத்தனை கடனையும் அடைப்பதற்கு எங்கிருந்து பணம் வந்தது ? மீண்டும் செல்வச் சீமானாக வலம் வருவது எப்படி என்பதை "பயம்" இல்லாமல் சொல்வாரா பம்(மிய)மல் நேரு ?

உங்கள் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த, இப்போதும் அமைச்சராக இருக்கும் பழனிவேல் தியாகராஜன் ஒரு ஆடியோவில், குறுகிய காலத்தில் சுமார் 30,000 கோடி ரூபாயை திரு. ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் சுருட்டியதாகச் சொன்னாரே யார் அவர்கள் என்று "பயம்" இல்லாமல் சொல்வாரா பம்மல் நேரு?

இந்த 30,000 கோடி ரூபாய் உட்பட உங்களுடைய அனைத்து ஊழல்களும் அம்பலப்படும் என்பதால், ரெய்டுக்கும், வருமானவரித் துறைக்கும், அமலாக்கத் துறைக்கும் "பயந்து" இந்தியா கூட்டணியில் இருந்தும் கூட, பாஜகவின் தலைவர்களில் ஒருவரான மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கை அழைத்து கருணாநிதி நாணயத்தை வெளியிட்டு, 'சூரியன்-தாமரை' கூட்டணியை தமிழ் நாட்டு மக்களுக்கு திரையிட்டுக் காட்டியவர்களே நீங்கள் தானே!

கொந்தளித்த எஸ்.பி. வேலுமணி!

மதுரை மாவட்டம், மேலூரில், அரிட்டாப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பிப்ரவரி 2024-ஆம் ஆண்டு டங்ஸ்டன் சுரங்க எல உரிமைக்காக ஒப்பந்தப் புள்ளி கோரியதில் இருந்து, 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டங்ஸ்டன் காங்க ஏலம் ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்கும் வரை, அதாவது 10 மாதங்கள் நடுங்கி, ஸ்டாலினின் தலைமையிலான விடியா திமுக அரசு, எதிர்ப்பு தெரிவித்தோ, சுரங்க ஏலத்தை ரத்து செய்யக் கோரியோ ஏன் கடிதம் எழுதவில்லை என்று மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் எழுப்பிய எக்ஸ் வலைதளக் கேள்விக்கு மதுரை, மேலூர் மக்களுக்கு பயமில்லாமல் பம்மல் நேரு பதில் அளிப்பாரா?

சிறுபான்மையினரின் காவலனாக போலி வேடமிடும் விடியா திமுக அரசு எதற்காக பயந்தது போய் சென்னையில் உள்ள NIA அலுவலகத்திற்கு கூடுதலாக காவல் நிலைய அங்கீகாரம் அளித்தது? அதுமட்டுமல்லாமல், தானாக FIR பதியும் அதிகாரத்தையும் அளித்தது எந்த பயத்தின் அடிப்படையில்?

பயம், பயம் என்று தெனாலி திரைப்பட வசனத்தை மேற்கோள் காட்டிய பம்மல் நேருவுக்கு, நானும் அதே மேற்கோளைத் தர விழைகிறேன்;

நீட் என்றால் பயம்! மேகதாது என்றால் பயம்! மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது கலைஞர் டி.வி-யில் ரெய்டு பயம்! குடையின் நிறத்தையே மாற்றி வெள்ளைக் குடை காட்டும் அளவுக்கு பயம்! பிரஸ் மீட் என்றால் பயம்! சட்டப் பேரவை என்றால் பயம்! நேரலை என்றால் இன்னும் பயம்! தற்போது டங்ஸ்டன் என்றால் பயம்! சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேச எழுந்தாலே பயமோ பயம்! காற்றடித்தால் பயம் - துண்டுச் சீட்டு பறந்துவிடுமே என்பதால்!

"உங்களுக்கு அருகதை இல்லை"

அதனால்தான், 2 நாட்களில் சட்டமன்றத்தையே நடத்தும் திரு. ஸ்டாலின், எங்கள் கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' அண்ணன் எடப்பாடியார் அவர்களுடைய அறிக்கைகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமல், தனது அடிமை மந்திரிகள் மூலம் பதில் அளிக்கிறார் என்பதை பம்மல் நேரு பயமில்லாமல் மக்களுக்கு தெளிவுபடுத்துவாரா?

திருச்சியின் தி.மு.க. தாதா தான்தான் என்று கூறும் இந்த நபரை, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு மந்திரியான அன்பில் மகேஷ் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மதிக்காத நிலை தான் உள்ளது. தங்களை சம்பாதிக்கவிடாமல், தொழில் செய்யவிடாமல் செயல்படுவதாக, சொந்தக் கட்சியினரே புலம்புகிறார்கள்.

தன் மகன் அருண் நேருவை நாடாளுமன்ற உறுப்பினராகவும், மற்றும் மாப்பிளைக்கும், வாரிசுக்கும் இவர் கால் கழுவியதை சொல்லிச் சொல்லி திருச்சி உடன்பிறப்புகள் காரி துப்புகிறார்கள். தன்மான சிங்கமாக பீடு நடைபோடும் எடப்பாடி பற்றி பேசுவதற்கு, இவருக்கு எந்த அருகதையும் இல்லை.

"பயம்" மட்டுமே உருவான உண்மையான கோழை, ஸ்டாலினின் சீனியர் கொத்தடிமையாக இருந்து, மாநகராட்சி கவுன்சிலர்களின் அடிதடிகளை கட்டப் பஞ்சாயத்து செய்வதையே முழுநேர வேலையாகக் கொண்டிருக்கும் நேருவுக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றி பேசுவதற்கு எள்ளளவும் அருகதை இல்லை" என விமர்சித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
Embed widget