ADMK general council: அதிமுக பொதுக் குழு நடைபெறும் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை!
அதிமுக பொதுக் குழு நடைபெறும் வானரகம் பகுதியில் 12 மணிக்கு முன்னரே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது
அதிமுக பொதுக் குழு நடைபெறும் வானகரம் பகுதியில், 12 மணிக்கு டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்னரே சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது.
நீதிமன்றம் தீர்ப்பு:
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இந்த வழக்கில் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி பொதுக்குழுக்கூட்டம் நடத்த அனுமதியளித்தார். இதனைத்தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என்று உத்தரவிட்டனர்.
ஆனால் தொண்டர்களின் கூட்டத்தில் சிக்கிய எடப்பாடி பழனிசாமிக்கு பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் அவர் ஒரு மணி நேரம் தாமதமாக வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு தீர்மானங்களை முன்மொழிய, அதனை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வழிமொழிவதாக தெரிவித்தார்.
Also Read: AIADMK Meeting Highlights: பரபரப்புக்கு பஞ்சமில்லாத அதிமுக பொதுக்குழு - 20 சுவாரஷ்ய தகவல்கள்!
இதனிடையே பொதுக்குழு கூட்டம் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்றது. பொதுக்குழுவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க ஸ்ரீவாரு மண்டபத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்தும், அதிமுக பொதுக் குழு நடைபெறும் இடத்திற்கு வந்த அதிமுக தொண்டர்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யும் மதுவை வாங்கி குடித்தனர்.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்