ADMK Breaking LIVE: ஜெயக்குமாருக்கு தகுதி இல்லை; எல்லாத்துக்கும் இபிஎஸ்தான் காரணம்” - சரவெடி வெடித்த கோவை செல்வராஜ்
AIADMK: அதிமுக கட்சியில் தொடரும் சர்ச்சைகள் குறித்த உடனடி தகவல்கள் இங்கே...
LIVE

Background
ஜெயக்குமாருக்கு தகுதி இல்லை; எல்லாத்துக்கும் இபிஎஸ்தான் காரணம்” - சரவெடி வெடித்த கோவை செல்வராஜ்
ஜெயக்குமாருக்கு தகுதி இல்லை; எல்லாத்துக்கும் இபிஎஸ்தான் காரணம்” - சரவெடி வெடித்த கோவை செல்வராஜ்
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு மீதான விசாரணை - நாளைக்கு ஒத்திவைப்பு!
அதிமுக பொதுக்குழு நடைபெற தடை விதிக்க கோரி ஓ.பி.எஸ். தொடர்ந்த வழக்க்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பி.எஸ். அளித்த மனு: சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது!
வரும் 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவிற்கு தடைகோரி ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பி.எஸ். அளித்த மனு தாக்கல்- சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். மனு மீது 2.15 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.
வரும் 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவிற்கு தடைகோரி ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் பிற்பகலில் 2.15 மணிக்கு விசாரணைக்கு நடைபெற இருக்கிறது. நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வருகிறது.
இ.பி.எஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஜய் நாராயண், எஸ். ஆர். ராஜகோபால் ஆகியோர் ஆஜராக உள்ளனர். ஓ.பி.எஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராக உள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பாக தனிநீதிபதி பிறப்பிக்கும் உத்தரவே இறுதியானது என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்திருந்தது.
பொதுக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி- ஈ.பி.எஸ். ஆதரவாளர் இன்பதுரை
வரும் 11- ஆம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்று செய்தியாளர் சந்திப்பில் ஈ.பி.எஸ். ஆதரவாளர் இன்பதுரை தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

