மேலும் அறிய

Reliance Jio | தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் கூடுதலாக 20MHZ அலைக்கற்றை - ஜியோ அறிவிப்பு

ஜியோ நிறுவனம் 850MHZ 1800MHZ மற்றும் 2300MHZ பேண்டுகளில் இந்த அலைக்கற்றைகளை பெற்றிருந்தது.

இந்திய அரசின் தொலை தொடர்புத்துறையால் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்ட அலைக்கற்றை செயல் நடவடிக்கையின்போது இந்தியாவில் உள்ள அனைத்து 22 சர்க்கிள்களிலும் அலைக்கற்றையை பயன்படுத்துவதற்கான உரிமையை தான் வெற்றிகரமாக பெற்றிருப்பதாக மார்ச் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் லிமிடெட் அறிவித்திருந்தது. ஜியோ நிறுவனம் 850MHZ 1800MHZ மற்றும் 2300MHZ பேண்டுகளில்  இந்த அலைக்கற்றைகளை பெற்றிருந்தது.

தமிழ்நாட்டில் கூடுதலாக 850MHZ பேண்டில் 5MHZ 1800மMHZ பேண்டில் 5MHZ மற்றும் 2300MHZ 10MHZஅலைக்கற்றைகளை ஜியோ நிறுவனம் ஏலத்தில் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Reliance Jio | தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் கூடுதலாக 20MHZ அலைக்கற்றை - ஜியோ அறிவிப்பு

இப்போது தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் அமைந்துள்ள 22,000 தொலைத்தொடர்பு அமைவிடங்கள் அனைத்திலும் மேற்குறிப்பிட்ட மூன்று அலைக்கற்றைகளில் கூடுதலாக பெறப்பட்டிருக்கும் அலைக்கற்றைகளில் பயன்பாட்டு நடவடிக்கையை ஜியோ தொடங்கியிருக்கிறது. இதன் மூலம் 850, 1800, 2300mah களின் பயன்பாட்டிற்கு கிடைக்கக்கூடிய மொத்த அலைக்கற்றை அகலம் ஐம்பது சதவீதம் அளவிற்கு முன்னேற்றம் பெறும். 

மிகப்பெரிய அளவிலான இந்த அலைக்கற்றை அளவு அதிகரிப்பு தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த ஜியோ சந்தாதாரர்களுக்கு தொலைத்தொடர்பு வலையமைப்பு அனுபவத்தை மேலும் பன்மடங்கு மேம்படுத்துவதற்கு நிச்சயமாக உதவும். இந்த நடவடிக்கையானது ஜியோ வலையமைப்பின் செயல்திறனை 50 சதவீதம் அளவிற்கு உயர்த்தி இருப்பதோடு தமிழ்நாட்டில் மிக அதிக வேகம் இருப்பதையும் மற்றும் மேம்படுத்தப்பட்ட வலையமைப்பு அனுபவம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கப் பெறுவதையும் சாத்தியமாக்குகிறது.

தற்போதுள்ள பெருந்தொற்று சூழல், கட்டுப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து மற்றும் பொதுமுடக்கத்தை கருத்தில் கொண்டு பார்க்கையில், கூடுதல் அலைக்கற்றை சேர்க்கப்பட்டு இருப்பது உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கையாக இருக்கிறது. வீட்டில் இருந்து பணியாற்றும் பணியாளர்களுக்கும், ஆன்லைன் லைன் மாணவர்கள் வகுப்பில் பங்கேற்கவும் வீட்டிலிருந்தே பிசினஸ் நடவடிக்களை தொழில் முனைவோர் மேற்கொள்ளவும் இது உதவும். வீடுகளில் பாதுகாப்பாக இருந்து கொண்டே தங்களது அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் சிரமமின்றி எளிதாக டிஜிட்டல் முறையில் மேற்கொள்வதை இது எளிதாக்கும். 

இந்த இணைப்பு வசதியும் அனுபவமும் கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தளராமல் செயலாற்றிகொண்டிருக்கின்ற மருத்துவத் துறை பணியாளர்கள் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

Reliance Jio | தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் கூடுதலாக 20MHZ அலைக்கற்றை - ஜியோ அறிவிப்பு

TRAI அமைப்பின் சமீபத்திய தரவின் படி தமிழ்நாட்டில் ஏறக்குறைய 2.5 கோடி சந்தாதாரர் அடித்தளத்தையும், வாடிக்கையாளர் சந்தையில் 30.3 சதவீத பங்கினையும் ஜியோ கொண்டிருக்கிறது. 4ஜி டவர்களுக்கு அதிகரித்துவரும் தேவையின் காரணமாக, 2021-ஆம் ஆண்டில் தனது 4ஜி வலையமைப்பை 20% அளவிற்கு ஜியோ விரிவாக்கம் செய்திருந்தது. மாநிலம் முழுவதிலும் பயன்பாட்டில் உள்ள தொலைத்தொடர்பு அமைவிடங்கள் அடிப்படையில் ஜியோ தொடர்ந்து முதலிடம் வகித்து வருவது. தற்போது, இம்மாநிலத்தில் 22,000 என்ற எண்ணிக்கைக்கும் அதிகமாக வலையமைப்பு அமைவிடங்களை கொண்டிருப்பதான் வழியாக தமிழ்நாட்டின் மிகப்பெரிய 4ஜி வலையமைப்பாக ஜியோ திகழ்கிறது.

சமீபத்தில் நடைபெற்ற அலைக்கற்றை ஏலத்தில் ரூபாய் 57 ஆயிரத்து 123 கோடி மதிப்பில் 20 ஆண்டுகள் கால அளவிற்கு 488.35MHZ (850MHZ, 1800MHZ, 2300MHZ உட்பட) என்ற மொத்த அலைக்கற்றையை 22 சரக்கிள்களில் ஜியோ பெற்றது. இதன் மூலம் தனது மொத்த அலைக்கற்றை அளவை 1717MHZ ஆக, அதாவது 55% அளவிற்கு மிகக் கணிசமான ஜியோ உயர்த்தி இருக்கிறது. இந்தியா முழுவதிலும் ஏறக்குறைய 426 மில்லியன் சந்தாதாரர்களை ஜியோவில் தற்போது கொண்டிருக்கிறது. புதிதாக பெறப்பட்டிருக்கும் கூடுதல் அலைக்கற்றை மூலம் தனது தற்போதைய பயனாளிகளுக்கு இன்னும் சிறப்பான சேவைகளை வழங்கும் தனது வலையமைப்பு திறனை ரிலையன்ஸ் ஜியோ இன்னும் மேம்படுத்தும். டிஜிட்டல் சேவைகளைப் பெறுபவர்களாக இன்னும் கூடுதலாக 300 மில்லியன் பயனாளிகளை சேர்த்துக் கொள்வதற்கும் மற்றும் 5ஜி சேவைகளுக்கான மாற்றத்தை நோக்கி வலுவாகப்  பயணிப்பதற்கும் இந்த மேம்பாட்டு நடவடிக்கை ரிலையன்ஸ் ஜியோவுக்கு பெரிதும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
Gold Silver Rates Dec.22nd: ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
Gold Silver Rates Dec.22nd: ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
Mahindra Scorpio N: புத்தாண்டில் மஹிந்த்ராவின் முதல் சம்பவம் - ஸ்கார்ப்பியோ அப்க்ரேட், என்ன இருக்கு? எப்படி வரும்?
Mahindra Scorpio N: புத்தாண்டில் மஹிந்த்ராவின் முதல் சம்பவம் - ஸ்கார்ப்பியோ அப்க்ரேட், என்ன இருக்கு? எப்படி வரும்?
தானத்தில் தழைத்தோங்கும் தமிழ்நாடு.. 5 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானத்தில் மாஸ் காட்டிய தமிழகம்!
தானத்தில் தழைத்தோங்கும் தமிழ்நாடு.. 5 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானத்தில் மாஸ் காட்டிய தமிழகம்!
Trump Epstein Files: எப்ஸ்டீன் கோப்புகள்; மீண்டும் தோன்றிய ட்ரம்ப்பின் புகைப்படங்கள்; நீதித்துறை அளித்த விளக்கம் என்ன.?
எப்ஸ்டீன் கோப்புகள்; மீண்டும் தோன்றிய ட்ரம்ப்பின் புகைப்படங்கள்; நீதித்துறை அளித்த விளக்கம் என்ன.?
TVK VIJAY: 70 தொகுதிகளில் தவெக டெபாசிட் இழக்கும்.!! விஜய்க்கு ஷாக் கொடுக்கும் இந்து மக்கள் கட்சி
70 தொகுதிகளில் தவெக டெபாசிட் இழக்கும்.!! விஜய்க்கு ஷாக் கொடுக்கும் இந்து மக்கள் கட்சி
Embed widget