மேலும் அறிய

எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கில் வரவு செலவு கணக்கு தொடர்பாக விவரங்கள் சேகரிப்பு

எடப்பாடி பழனிசாமி மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களை மறைத்ததாக தேனி மாவட்டத்தை சேர்ந்த வழக்குரைஞர் மிலானி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான விசாரணை சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1ல் நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் 28 ஆம் தேதி வழக்கினை விசாரித்த நீதிபதி கலைவாணி இந்த வழக்கு தொடர்பாக 30 நாட்களுக்குள் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு சேலம் மத்திய குற்ற பிரிவினருக்கு உத்தரவிட்டார். மேலும் பொதுநல வழக்கை தொடர்ந்த வழக்கறிஞர் மிலானிக்கு உரிய பாதுகாப்பை வழங்கவும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கில் வரவு செலவு கணக்கு தொடர்பாக விவரங்கள் சேகரிப்பு

இந்த நிலையில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவு 125A(1), 125A(ii), 125A(iii) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்காம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சூர்யா, இன்ஸ்பெக்டர் புஷ்பராணி ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக ஆவணங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வங்கியின் வரவு - செலவு கணக்கு தொடர்பாக விவரங்கள் சேரிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் புகார்தாரரை அழைத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget