மேலும் அறிய

விளம்பர தூதராக மாறிய நடிகை ஸ்ரீலீலா! அடுத்த கட்ட பாய்ச்சலுக்குத் தயாரான சென்னைஸ் அமிர்தா

பிரபல நடிகை ஸ்ரீலீலாவை சென்னைஸ் அமிர்தா குழும தலைவர் பூமிநாதன், தங்கள் குழுமத்தின் பிராண்ட் அம்பாசிடராக அறிவித்தார்.

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் சென்னைஸ் அமிர்தா குழும நிறுவனங்களின் புதிய லோகோவை தலைவர் திரு.பூமிநாதன்  மற்றும் நடிகை ஸ்ரீலீலா வெளியிட்டனர். 

சென்னை அமிர்தா பிராண்ட் அம்பாசிடர்:

மேலும் சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரிக்கான பிரத்யேக இணைய தளத்தையும் நடிகை ஶ்ரீலீலா தொடங்கி வைத்தார். அத்துடன் ஏவியேஷன் படிப்பில் இணைந்த முதல் 10 மாணவர்களுக்கு அனுமதி சான்றிதழ்களையும் ஶ்ரீலீலா தனது கரங்களால் வழங்கி சிறப்பித்தார்.

 இந்நிகழ்ச்சியில்,  ஸ்ரீலீலாவின் திரைப்பயணம் மற்றும் அவரது திரையுலக வெற்றி தொடர்பான ஏ.வி. ஒளிபரப்பப்பட்டது.  நிகழ்ச்சியில் உரையாற்றிய ஶ்ரீலீலா,  மாணவர்களிடையே தலைமைப் பண்புகளை வளர்ப்பதற்கும், மேம்பாடு அடைந்துவரும் கேட்டரிங் துறையில்,   மாணவர்களின் வெற்றிக்கு தயார்படுத்தும் சென்னையின் அமிர்தாவின் செயல்பாடுகளை பாராட்டினார்.   சென்னைஸ் அமிர்தாவின்  நவீன கல்வித் தரம்,  மற்றும் நட்சத்திர ஹோட்டல்களுக்கு நிகரான உள்கட்டமைப்புகளை ஶ்ரீலீலா வெகுவாகப் பாராட்டினார். 

விமானத் துறையிலும் அமிர்தாஸ்:

சென்னைஸ் அமிர்தா, சர்வதேச அளவில் சுமார் 25,000 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த முதல் நிறுவனம் என்பதையும், மாணவர்களுக்கு படிக்கும்போதே பகுதி நேர வேலை வாய்ப்புகளை வழங்கும் சென்னைஸ் அமிர்தாவின் "ஏர்ன் வைல் லேர்ன்" முன்முயற்சி குறித்தும் ஶ்ரீலீலா தனது உரையில் எடுத்துக் கூறினார். 

2010 ஆம் ஆண்டு முதல் ஹோட்டல் மேலாண்மைக் கல்வியில் முன்னணியில் இருக்கும் சென்னைஸ் அமிர்தா குழும நிறுவனங்கள், பெங்களூரு, விஜயவாடா மற்றும் ஹைதராபாத் வரை தனது கல்வி நிறுவனங்களை விரிவுபடுத்தி, தென்னிந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனமாக திகழ்கிறது. நடப்பு கல்வியாண்டில்,  மலேசியாவின் ஏவியேஷன் பல்கலைக்கழகத்துடன்  (UniCAM) செய்த ஒப்பந்தம்  மூலம் விமானத் துறையிலும் அடியெடுத்து வைத்துள்ளது. 

சமையல் ஒலிம்பிக்கில் தங்கம்:

இதற்கென, சென்னை,  ஆயிரம் விளக்கு மெட்ரோ நிலையம் அருகே,  புதிய கல்வி வளாகத்தை குழும தலைவர் பூமிநாதன் திறந்து வைத்தார்.  இந்த வளாகம் 40,000 சதுர அடி பரப்பளவில், நவீன உட்கட்டமைப்புடன் மிளிர்கிறது.  சென்னை, சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் கேட்டரிங் துறையின் சர்வதேச கற்றல் திட்டத்தை,  பர்மிங்காம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து விமானப் படிப்புகளுடன் விரிவாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. 

சர்வதேச அளவில் கேட்டரிங் கல்வியில் முன்னிலை வகிக்கும் சென்னைஸ் அமிர்தா, ஜெர்மனியின் ஸ்டட்கார்ட்டில் நடந்த ஐகேஏ/சமையல் ஒலிம்பிக்கில் மூன்று தங்கம் உட்பட பத்து பதக்கங்களை வென்று சரித்திர சாதனை படைத்தது.  124 ஆண்டுகால வரலாற்றில் ஐகேஏ ஒலிம்பிக்கில்  இந்தியாவிற்கு முதன் முதலில் தங்கம் பெற்றுத் தந்த பெருமை சென்னைஸ் அமிர்தாவையே சேரும். 

 ஷார்ஜாவில் நடந்த 27வது எக்ஸ்போ கலினயேர் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களையும் பெற்று சென்னைஸ் அமிர்தா சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Annamalai Tweet: தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
Embed widget