நடிகர் அருண்பாண்டியனுக்கு இதய சிகிச்சை: மகள் பதிவிட்ட விழிப்புணர்வு பதிவு!

கடந்த மார்ச் மாதம் வெளியான அன்பிற்கினியாள் திரைப்படம் மூலம் மீண்டும் திரையில் முகம் காட்டினார் அருண் பாண்டியன். தன் மகள் கீர்த்தி பாண்டியனுடம் அப்படத்தில் அவர் நடித்திருந்தார். இந்நிலையில் அருண்பாண்டியனுக்கு இதய சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது என்றும், ஒருமாதகாலம் தான் சந்தித்த அனுபவம் குறித்தும் கீர்த்தி பாண்டியன் பதிவிட்டுள்ளார். 

கீர்த்தி பாண்டியன் பதிவிட்டுள்ள பேஸ்புக் பதிவில், கொரோனா குழப்பங்களுக்கு நடுவே ஒருநாள் இரவு அப்பா லேசான நெஞ்சு வலி, தூங்க முடியவில்லை என்றார். அவரை அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். எல்லாம் சரியாக இருந்தது. அன்றிரவு மருத்துவமனையில் தங்க சொன்னார்கள். அடுத்த நாள் அப்பாவுக்குக் கொரோனா உறுதியானது.நடிகர் அருண்பாண்டியனுக்கு இதய சிகிச்சை: மகள் பதிவிட்ட விழிப்புணர்வு பதிவு!

இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திருநெல்வேலி வீட்டில் அவரை தனிமை படுத்தினோம். முதல் 7 நாட்களும் அங்கேயே மருத்துவ உதவி கிடைக்கச் செய்தோம். அவருக்கு  நீரிழிவு என்பதால் எங்களுக்கு பயமாக இருந்தது. ஆனால் அவர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் அவருக்கு தொற்று தீவிரமாகப் பரவவில்லை என்று நினைக்கிறேன்.

தொற்று இல்லை என்று தெரிந்து 7 நாட்களுக்குப் பிறகு மதுரை மீனாட்சி மருத்துவமனையில் முழு இதய பரிசோதனை செய்தோம். அதில் அப்பாவுக்கு இதயத்தில் பல அடைப்புகள் இருப்பதும், அதில் இரண்டு அடைப்புகள் 90% தீவிரமடைந்து இருப்பதும் தெரிந்தது. உடனடி சிகிச்சை தேவைப்பட்டது. அவசரம் என்பதால் அடுத்த நாளே ஆஞ்ஜியோப்ளாஸ்டி சிகிச்சை  செய்யப்பட்டது. இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு அப்பாவை சந்தித்தோம். அதிக வலியில் இருந்தாலும் நலமாக இருந்தார். அடுத்த ஒருநாள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பில் இருந்தார்.நடிகர் அருண்பாண்டியனுக்கு இதய சிகிச்சை: மகள் பதிவிட்ட விழிப்புணர்வு பதிவு!

அவசரத்தின் அடிப்படையில் அடுத்த நாளே அப்பாவுக்கு ஆஞ்ஜியோப்ளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது. கரோனாவிலிருந்து அப்போதுதான் மீண்டிருந்தாலும் அப்பா சிகிச்சை செய்துகொள்ளத் தயாராக, வலிமையுடன் இருந்தார். 2.5 மணி நேர சிகிச்சை முடிந்த பின்பு அப்பாவை சந்தித்தோம். அதிக வலியில் இருந்தாலும் நலமாக இருந்தார். அடுத்த 24 மணிநேரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.இப்போது அப்பா நலமாக இருக்கிறார். தேறி வருகிறார். அப்பா மனரீதியாக மிகவும் உறுதியுடன் இருந்தார். தன் உடலில் ஏதோ பிரச்னை என்பதை அவர் உணர்ந்துகொண்டார்.நடிகர் அருண்பாண்டியனுக்கு இதய சிகிச்சை: மகள் பதிவிட்ட விழிப்புணர்வு பதிவு!

நமது குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களை ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு அடிக்கடி உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இது மிக முக்கியம். அறிகுறிகள் தென்படும்போது அதைப் புரிந்துகொள்வதும் அவசியம். சிறிய அறிகுறிகள் என்றாலும் அலட்சியம் செய்யாதீர்கள். சரியான நேரத்தில் சிகிச்சை என்பது மிக முக்கியம். தயவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள், முகக்கவசம் அணியுங்கள், பாதுகாப்பாக இருங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: keerthy pandiyan arun pandiyan arun pandiyan health

தொடர்புடைய செய்திகள்

Tamil Nadu Lockdown: தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?  முதல்வர் இன்று ஆலோசனை

Tamil Nadu Lockdown: தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதல்வர் இன்று ஆலோசனை

Tamil Nadu Coronavirus LIVE News : அனைத்து மாவட்டங்களிலும் சரிந்த கொரோனா தொற்று!

Tamil Nadu Coronavirus LIVE News : அனைத்து மாவட்டங்களிலும் சரிந்த கொரோனா தொற்று!

அச்சுறுத்தும் கொரோனா தொற்று : தேங்கிய கருப்பட்டி, கவலையில் பனை தொழிலாளிகள்..

அச்சுறுத்தும் கொரோனா தொற்று : தேங்கிய கருப்பட்டி, கவலையில் பனை தொழிலாளிகள்..

Me Too : ”நோ” சொல்லியும் நடந்தது : ஐ.ஆர்.எஸ் அதிகாரி பூ.கொ.சரவணன் மீது குவியும் புகார்கள்!

Me Too : ”நோ” சொல்லியும் நடந்தது : ஐ.ஆர்.எஸ் அதிகாரி பூ.கொ.சரவணன் மீது குவியும் புகார்கள்!

திருவண்ணாமலை : குறைந்துவரும் கொரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை..

திருவண்ணாமலை : குறைந்துவரும் கொரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை..

டாப் நியூஸ்

Sundar Pichai Income: டாலர்கள் சரணடைந்த சுந்தர் பிச்சையின் தனி சர்க்கார்!

Sundar Pichai Income: டாலர்கள் சரணடைந்த சுந்தர் பிச்சையின் தனி சர்க்கார்!

Sundar Pichai Birthday: பெர்த்டே பாய் சுந்தர் பிச்சையின் இன்னொரு உலகம் இது!

Sundar Pichai Birthday: பெர்த்டே பாய் சுந்தர் பிச்சையின் இன்னொரு உலகம் இது!

Maanadu First Single | ‛மாஷாஅல்லாஹ்...’ ட்விட்டரில் ட்ரெண்டிங் அடிக்கும் மாநாடு!

Maanadu First Single | ‛மாஷாஅல்லாஹ்...’ ட்விட்டரில் ட்ரெண்டிங் அடிக்கும் மாநாடு!

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்