“வருங்கால தலைமுறைக்கு தைரியத்தை காட்டியுள்ளனர்” - இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு சூப்பர் ஸ்டாரின் சூப்பர் வாழ்த்து
உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.

முதல் முறையாக 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்திய மகளிர் அணியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மும்பையில் நேற்று நடைபெற்ற 50 ஓவர் மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை வென்றது. மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, மொத்தமாக சுமார் 123 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது. இறுதிப் போட்டியில் வென்றதற்காக சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி) பரிசுத் தொகையாக 4.48 மில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 39.78 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிடோர் வாழ்த்துகளை தெரிவித்தனர். தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாழ்த்துகளை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ரஜினிகாந்த தனது எக்ஸ் வலைதள பதிவில், “என்ன ஒரு அற்புதமான தருணம்; நம் மகளிர் அணி வருங்கால தலைமுறைக்கு தைரியத்தை காட்டியுள்ளனர். அசைக்க முடியாத சக்தியுடனும், அச்சமற்ற மனப்பான்மையுடனும் இந்தியாவின் மூவர்ணத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்றுள்ளனர். வரலாறு படைத்ததற்கு வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
What a glorious moment for India! 🇮🇳 Our Women in Blue have redefined courage, grace, and power inspiring generations to come. You’ve carried the tricolour across the world with fearless, unbreakable spirit. Many congratulations! 🙏🏻 History has been made. Jai Hind! 🇮🇳 pic.twitter.com/5AMjZu94QT
— Rajinikanth (@rajinikanth) November 3, 2025">





















