TN Weather Update: மழையும் வெயிலும்.. தமிழ்நாட்டின் இன்றைய வானிலை நிலவரம் இதோ..
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தென் மற்றும் வட தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தென் மற்றும் வட தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10.04.2023: தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.
11.04.2023: தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.
12.04.2023 முதல் 14.04.2023 வரை: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
எட்டையபுரம் (தூத்துக்குடி) 5, செங்கோட்டை (தென்காசி), தென்காசி தலா 4, ஆயிக்குடி (தென்காசி), சங்கரன்கோவில் (தென்காசி), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி) தலா 3, கோவில்பட்டி (தூத்துக்குடி), பெரியபட்டி (மதுரை) தலா 2, தக்கலை (கன்னியாகுமரி), கள்ளந்திரி (மதுரை), மயிலாடி (கன்னியாகுமரி), ராதாபுரம் (திருநெல்வேலி), மேட்டுப்பட்டி (மதுரை), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), கழுகுமலை (தூத்துக்குடி), குண்டாறு அணை (தென்காசி), கருப்பாநதி அணை (தென்காசி), நம்பியாறு அணை (திருநெல்வேலி), ராமநதி அணை (தென்காசி), விருதுநகர் AWS (விருதுநகர்) தலா 1 செ. மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை ஈரோடு மாவட்டத்தில் 38.4 டிகிரி செல்சியஸ் (101.12 டிகிரி பாரன்ஹீட்) பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தி – 38.0 டிகிரி செல்சியஸ், சேலம், துருப்பத்தூர் – 37 டிகிரி செல்சியஸ், மதுரை, திருச்சி, வேலூர் – 36 டிகிரி செல்சியஸ், கோவை, பாம்பன், திருத்தணி – 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 34 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 33 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.
வேலூரில் வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. காரைக்காலில் இயல்பை விட 1.6 டிகிரி செல்சியஸும், கோவையில் 1.3 டிகிரி செல்சியஸும், திருத்தணி, தொண்டி ஆகிய பகுதிகளில் 1.2 டிகிரி செல்ஸியல் வெப்பநிலை அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.