மேலும் அறிய

TN Weather Update: 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகும் வெப்பநிலை.. கொளுத்தும் வெயில்.. வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும்?

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது. இனி வரும் நாட்களில் வறண்ட வானிலையே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த  சில நாட்களாக வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது. இனி வரும் நாட்களில் வறண்ட வானிலையே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாகி வருகிறது. 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகி வருகிறது. இது ஒருபுறமிருக்க கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.  

10.04.2023: தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் 13.04.2023 வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மேலும் பாபநாசம் (திருநெல்வேலி) 2, செங்கோட்டை (தென்காசி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), கன்னடியன் அணைக்கட்டு (திருநெல்வேலி) தலா 1 செ. மீ மழை  பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி வருகிறது. நேற்று தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை  ஈரோடு மாவட்டத்தில் 38.4 டிகிரி செல்சியஸ் (101.12 டிகிரி பாரன்ஹீட்) பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தி – 38.0 டிகிரி செல்சியஸ், சேலம், துருப்பத்தூர் – 37 டிகிரி செல்சியஸ், மதுரை, திருச்சி, வேலூர் – 36 டிகிரி செல்சியஸ், கோவை, பாம்பன், திருத்தணி – 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 34 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 33 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.

வேலூரில் வெப்பநிலை  இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ்  அதிகமாக பதிவாகியுள்ளது. காரைக்காலில் இயல்பை விட 1.6 டிகிரி செல்சியஸும், கோவையில் 1.3 டிகிரி செல்சியஸும், திருத்தணி, தொண்டி ஆகிய பகுதிகளில் 1.2 டிகிரி செல்ஸியல் வெப்பநிலை அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், வரும் நாட்களில் வறண்ட வானிலை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் நாட்களில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் கத்தரி வெயில் தொடங்க இருக்கும் நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். அதிகபட்சமாக 40 முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்வேகமெடுக்கும் லஞ்ச வழக்கு..  அமெரிக்கா வைத்த ஆப்பு?  கலக்கத்தில் கவுதம் அதானி!’’புடவை என்னமா விலை?’’  ரஷ்ய பெண்ணுடன் SELFIE  பாஜக  மகளிரணி ATROCITYMRK  Panneerselvam Angry |’'எருமை மாடா டா நீ’’ஒருமையில் திட்டிய அமைச்சர்  அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
Pongal Leave: ஜாலி நியூஸ்! ஜனவரி 17ம் தேதியும் அரசு விடுமுறை - ஒரு வாரம் ஹாப்பியா இருங்க
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன், இந்த ஆண்டுக்கான வருவாய் இத்தனை கோடியா..?
Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
ரூ.2000 தேவையில்லை..‌ ரூ.250 போதும் 'மாஸ்டர் ஹெல்த் செக்கப்'.. செங்கல்பட்டு மக்கள் ஹேப்பி..!
Vikravandi Child Death: குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
குழந்தை மரணத்தில் சந்தேகம்; பள்ளி ஆசிரியர் கைது - உச்சகட்ட பதற்றத்தில் விக்கிரவாண்டி
TN Heavy Rain: மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
மறுபடியுமா.! 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.! வானிலை மையம் சொல்வது என்ன?
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உயிரிழப்பு; பள்ளி முதல்வருக்கு திடீரென வந்த ரத்து அழுத்தம்; மருத்துவமனையில் அனுமதி
Embed widget