TN Weather Update: 41 டிகிரி செல்சியஸை கடக்கும் வெப்பநிலை.. இயல்பை விட வெயில் அதிகரிக்கும்.. சூடான வானிலை நிலவரம் இதோ..
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
14.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15.06.2023 மற்றும் 16.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
17.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
18.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை :
14.06.2023 முதல் 16.06.2023 வரை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
வாழப்பாடி (சேலம்) 6, வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), ராசிபுரம் (நாமக்கல்), தழுதலை (பெரம்பலூர்), எருமப்பட்டி (நாமக்கல்) தலா 5, நாமக்கல் ஆட்சியர் அலுவலகம், கலவை பொதுப்பணித்துறை (இராணிப்பேட்டை), கிருஷ்ணகிரி, பணப்பாக்கம் (இராணிப்பேட்டை), ஆரணி (திருவண்ணாமலை) தலா 4, சேந்தமங்கலம் (நாமக்கல்), தொழுதூர் (கடலூர்), கங்கவல்லி (சேலம்), மே.மாத்தூர் (கடலூர்), திருப்பத்தூர் (சிவகங்கை), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), நாமக்கல், கரியகோவில் அணை (சேலம்), ஏற்காடு (சேலம்) தலா 3, பென்னாகரம் (தருமபுரி), பாலக்கோடு (தருமபுரி), பார்வூட் (நீலகிரி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), ஆம்பூர் (திருப்பத்தூர்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), பெரம்பலூர், மருங்காபுரி (திருச்சி), சத்தியமங்கலம் (ஈரோடு), எறையூர் (பெரம்பலூர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), கிளச்செருவை (கடலூர்), பாப்பாரப்பட்டி KVK AWS (தருமபுரி), அம்மாபேட்டை (ஈரோடு) தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.