மேலும் அறிய

TN Weather Update: இன்றும் நாளையும் வெப்ப அலை வீசும்.. 9 மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் கடந்து பதிவான வெப்பநிலை..

வட  தமிழக உள் மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.  ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை, தென் தமிழகத்தில்  ஓரிரு  இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.  வட தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதேபோல் 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு:

அதிகபட்ச   வெப்பநிலை  வட தமிழக  உள்  மாவட்டங்களின்  ஒருசில  இடங்களில்  இயல்பை விட 3° – 5° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 38°–41° செல்சியஸ், இதர  தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°–38° செல்சியஸ் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஈரப்பதம்:

24.04.2024 முதல் 28.04.2024 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள்  மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில்  பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85% ஆகவும்  இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:

இன்றும் நாளையும்,  வட  தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 9  இடங்களில்   40-42° செல்சியஸ் பதிவாகியுள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை  சேலத்தில் 42.3° செல்சியஸ், ஈரோட்டில் 42.0° செல்சியஸ், திருப்பத்தூரில் 41.6° செல்சியஸ், கரூர் பரமத்தி &  வேலூரில் 41.5° செல்சியஸ், தர்மபுரி & மதுரையில் (நகரம்)   41.0° செல்சியஸ், நாமக்கல்லில் 40.5° செல்சியஸ் மற்றும் திருச்சியில் 40.1° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

இதர தமிழக உள் மாவட்டங்களில் 38° – 39° செல்சியஸ் பதிவாகியுள்ளது.  தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34° – 38° செல்சியஸ்    மற்றும் மலைப் பகுதிகளில் 21° –28°  செல்சியஸ்  பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 38.3° செல்சியஸ்  மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.1° செல்சியஸ்   பதிவாகியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Session: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று.. எம்.பி.க்கள் பதவியேற்பு..
18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று.. எம்.பி.க்கள் பதவியேற்பு..
Bakery Training: தமிழ்நாடு அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கூடுதல் விவரங்கள்
Bakery Training: தமிழ்நாடு அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கூடுதல் விவரங்கள்
T20 World Cup 2024: அரையிறுதி முனைப்பில் இந்திய அணி.. சோதிக்குமா ஆஸ்திரேலிய அணி..? சூப்பர் 8ல் இன்று மோதல்..!
அரையிறுதி முனைப்பில் இந்திய அணி.. சோதிக்குமா ஆஸ்திரேலிய அணி..? சூப்பர் 8ல் இன்று மோதல்..!
Thalapathy Vijay: தனக்காக கூடிய கூட்டம்.. ஆச்சரியப்பட்ட விஜய்.. ஏ.எல்.விஜய் சொன்ன சுவாரஸ்ய தகவல்!
தனக்காக கூடிய கூட்டம்.. ஆச்சரியப்பட்ட விஜய்.. ஏ.எல்.விஜய் சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Trichy Surya | Trichy Surya | NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Session: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று.. எம்.பி.க்கள் பதவியேற்பு..
18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று.. எம்.பி.க்கள் பதவியேற்பு..
Bakery Training: தமிழ்நாடு அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கூடுதல் விவரங்கள்
Bakery Training: தமிழ்நாடு அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கூடுதல் விவரங்கள்
T20 World Cup 2024: அரையிறுதி முனைப்பில் இந்திய அணி.. சோதிக்குமா ஆஸ்திரேலிய அணி..? சூப்பர் 8ல் இன்று மோதல்..!
அரையிறுதி முனைப்பில் இந்திய அணி.. சோதிக்குமா ஆஸ்திரேலிய அணி..? சூப்பர் 8ல் இன்று மோதல்..!
Thalapathy Vijay: தனக்காக கூடிய கூட்டம்.. ஆச்சரியப்பட்ட விஜய்.. ஏ.எல்.விஜய் சொன்ன சுவாரஸ்ய தகவல்!
தனக்காக கூடிய கூட்டம்.. ஆச்சரியப்பட்ட விஜய்.. ஏ.எல்.விஜய் சொன்ன சுவாரஸ்ய தகவல்!
பரிசுகள், மொய்ப்பணம் வேணாங்க... மதுரையில் எளிமையாக நடைபெற்ற இயக்குநர் அமீர் மகள் திருமணம்
பரிசுகள், மொய்ப்பணம் வேணாங்க... மதுரையில் எளிமையாக நடைபெற்ற இயக்குநர் அமீர் மகள் திருமணம்
NEET Retest: நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
நீட் மறுதேர்வு.. பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுதவில்லை.. தேசிய தேர்வு முகமை அதிர்ச்சி தகவல்!
Rasipalan: துலாமுக்கு பரிசு.. விருச்சிகத்துக்கு செலவு: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: துலாமுக்கு பரிசு.. விருச்சிகத்துக்கு செலவு: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை - அதிகாரிகளுக்கு தி.மலை ஆட்சியர் உத்தரவு
Embed widget