TN Rain Alert: குடையோட கிளம்புங்க.. காலை 10 மணிவரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? இன்றைய வானிலை நிலவரம்..
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம்.
மேலும், தென்கிழக்கு மற்றும் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 13 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நவம்பர் மாதம் முதல் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் சென்னையில் வெப்ப நிலை அதிகமாக காணப்பட்டது. இன்று அதிகாலை நகரின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தற்போது வரை சென்னையில் பதிவான மழையின் அளவு இயல்பை விட குறைவாக இருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு: (மில்லிமீட்டரில்)
நாகப்பட்டினம் 44.0, ஏற்காடு_(சேலம்) 41.0, சேலம் 17.0, புதுச்சேரி 12.0, கோயம்புத்தூர் 12.0, நுங்கம்பாக்கம் (சென்னை) 9.6, அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 8.0, புழல் (திருவள்ளூர்) 11.5, அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 11.0, நந்தனம் (சென்னை) 9.0, செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 6.5 மிமீ அளவு மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
அரபிக்கடல் பகுதிகள்:
08.11.2023: மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
09.11.2023: மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
10.11.2023 மற்றும் 11.11.2023: மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.