TN Rain Alert: மாலை 7 மணிவரை 6 மாவட்டங்களில் மழை.. தென் மாவட்டங்களுக்கு ஒரு குறிப்பு.. வெதர்மேன் சொல்லும் தகவல் என்ன?
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை அகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 30 ஆம் தேதி வரை தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 ஆம் தேதி, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1 ஆம் தேதி, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
29, 30, 31 December - very less chance of heavy rains in plains area of south Tamil Nadu. People in Thoothukudi, Nellai carry on with your regular work and don't panic.
— Tamil Nadu Weatherman (@praddy06) December 28, 2023
இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான கூறுகையில், வரும் 29,30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு தான் என்றும் தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இருக்கும் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளலாம என தெரிவித்துள்ளது. அதேபோல் மாஞ்சோலை பகுதியில் 60 முதல் 100 மி.மீ வரை மழை பதிவாகும் என்றும் இது அந்த பகுதியில் பதிவாகும் இயல்பான மழை அளவு தான் என்றும் இதன் காரணமாக எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.
Manjolai belt has chance of heavy rains of 60 to 100 mm. This is common there and even today it got 50 mm. This won't affect any common man regular life.
— Tamil Nadu Weatherman (@praddy06) December 28, 2023
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
29.12.2023: குமரிக்கடல் பகுதிகள் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா, மாலத்தீவு பகுதிகள், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
30.12.2023: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
31.12.2023 மற்றும் 01.01.2024: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.