(Source: ECI/ABP News/ABP Majha)
ABP EXCLUSIVE : 'முதல்வர் சொன்ன எதுவுமே கிடைக்கல.. ஒன்னுமே நடக்கல' - வேதனையாக பேசிய நரிக்குறவ பெண் அஸ்வினி!
கடனுதவி கொடுக்கப்பட்டிருந்தும், தடை இல்லை உள்ளிட்ட காரணங்களை கூறி தொடர்ந்து தங்களுக்கு வங்கியில் இருந்து கடன் உதவி கிடைக்கவில்லை என நரிக்குறவ பெண் அஸ்வினி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
சமூக வலைதளம் மூலம் தனக்கு ஏற்பட்ட அநீதி குறித்து, மகாபலிபுரம் பூஞ்சேரி பகுதியை சேர்ந்த அஸ்வினி என்கிற நரிக்குறவர் எனப் பெண் வீடியோ வெளியிட்டு இருந்தால், இந்த வீடியோ சமூக வலைதளம் முழுவதும் வைரலாகி வருகிறது.
கடந்த வருடம் தீபாவளி அன்று தமிழக முதலமைச்சர் அந்த பகுதிக்கு சென்று பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆனால் இந்நிலையில் கடனுதவி கொடுக்கப்பட்டிருந்தும், தடை இல்லை உள்ளிட்ட காரணங்களை கூறி தொடர்ந்து தங்களுக்கு வங்கியில் இருந்து கடன் உதவி கிடைக்கவில்லை என குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். தொடர்ந்து தங்களுக்கு கடை எடுத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை மனு கொடுத்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரை சந்தித்ததாகவும் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அஸ்வினி குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார்.
’’கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாம போகுது’’- குமுறும் நரிக்குறவ பெண் அஸ்வினி
— ABP Nadu (@abpnadu) August 17, 2022
Full Video:- https://t.co/RTUSl0JnLQ#NarikuravarAshwini #MKStalin pic.twitter.com/KE7VWQbQ6s
இந்தநிலையில் முதலமைச்சர் வழங்கிய கடனுதவி தற்போது வரை தங்களுக்கு கிடைக்கவில்லையென நரிக்குறவ பெண்மணி அஸ்வினி தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கைகள் இதுவரை நிறைவேறவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, எங்கள் பகுதிக்கு முதலமைச்சர் ஐயா வந்தாங்க 12 பேருக்கு தலா ஒரு லட்சம் கொடுத்தாங்க, 30 பேருக்கு 10 ஆயிரம் லோன் கொடுத்தாங்க, பட்டா, வீடு என நிறை சொன்னாங்க, ஆனால் எதுவுமே நடக்கவில்லை, ஒரு லட்சம் லோன் யாருக்கும் கொடுக்கவில்லை, ஒரு வருடம் ஆகிவிட்டது. கடை இருந்தா மட்டும் லோன் கொடுப்போம் என வங்கியில் கூறுகிறார்கள், இது தொடர்பாக அமைச்சர் தா.மோ அன்பரசனை பார்த்தோம், அவர் மாவட்ட ஆட்சியரை பார்க்க சொன்னார். மாவட்ட ஆட்சியர் கடை கொடுக்கலாம் என கூறினார். விஏஓ வந்து பார்த்தார்கள் கடைகள் காலியாக இல்லையென கூறுகிறார்கள என குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இது குறித்த அஸ்வினை கூறுகையில் மகாபலிபுரம் முழுவதும் நாங்கள் வியாபாரம் செய்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு என்ன ஒரு கடை கூட கிடையாது, வங்கியில் சேர்ந்து லோன் கேட்டால் லோன் கொடுப்பது கிடையாது, கழிவறை கட்ட வருவதற்கு கொண்டுவரப்பட்ட செங்கலை கூட எடுத்து சென்று விட்டார்கள் என ஆதங்கத்துடன் தெரிவித்தார் அஸ்வினி.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்