Meenakshi Temple Quarantine Guidelines: கொரோனா வழிகாட்டுதல் ஆணையத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் போட்டோ; எதிர்ப்பை தொடர்ந்து வெளியிடப்பட்டது
‘தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் யோகி சிலையை பயன்படுத்தி இருந்த இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அதனை நீக்கி உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தெற்கு கோபுரத்தை வெளியிட்டுள்ளது. அதை வரவேற்கிறேன். இனி தவறியும் இது போன்ற தவறினை இழைக்காதீர்கள்’ - மதுரை எம்பி சு. வெங்கடேசன்
கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் அடங்கிய ஆவணத்தில் ஈஷா யோகா படத்தை நீக்கி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் தெற்கு கோபுரத்தை வெளியிட்டுள்ளது இந்தியா விமான நிலையத்தின் ஆணையம்.
இந்திய விமான நிலையத்தின் ஆணையம், சமீபத்தில் மாநிலங்களுக்கான கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் அடங்கிய ஆவணத்தை வெளியிட்டது. இதில், ஒவ்வொரு மாநிலத்திலும் பின்பற்ற வேண்டிய கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்துதல் தொடர்பான தகவல்கள் அடங்கிய ஆவணத்தை வெளியிட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டைக் குறிப்பிட்டு வரும் பகுதியில், தமிழ்நாட்டின் அடையாளமாக ஈஷா யோகா படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும், பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்தனர்.

The airports authority of India is using Jaggi vasudev's Yogi statue as Representative image of Tamil Nadu in its state quarantine guidelines. We strongly condemn this and demand it be changed right away @AAI_Official pic.twitter.com/6yRIsfgA0z
— Su Venkatesan MP (@SuVe4Madurai) May 13, 2021

இந்நிலையில், இந்திய விமான நிலையத்தின் ஆணையம் அந்த ஆவணத்தில் ஈஷா யோகா படத்தை நீக்கி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் தெற்கு கோபுரத்தை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் யோகி சிலையை பயன்படுத்தி இருந்த இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அதனை நீக்கி உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தெற்கு கோபுரத்தை வெளியிட்டுள்ளது. அதை வரவேற்கிறேன்.

இனி தவறியும் இது போன்ற தவறினை இழைக்காதீர்கள். @AAI_Official pic.twitter.com/fwFIroUp9U
— Su Venkatesan MP (@SuVe4Madurai) May 13, 2021

இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,
தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் யோகி சிலையை பயன்படுத்தி இருந்த இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அதனை நீக்கி உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தெற்கு கோபுரத்தை வெளியிட்டுள்ளது. அதை வரவேற்கிறேன். இனி தவறியும் இது போன்ற தவறினை இழைக்காதீர்கள்’ என்று பதிவிட்டுள்ளார். மதுரை எம்.பி.,யான சு.வெங்கடேசன் இது போன்ற மீட்பு பதிவுகள் அடிக்கடி பதிவிட்டு, அவற்றை மீண்டும் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.