மேலும் அறிய

ஏமாற்றம் ! புத்தாண்டில் இப்படியா செய்வது... திட்டி தீர்த்த மக்கள் - என்ன விஷயம்?

கடற்கரை சாலையில் கலை நிகழ்ச்சி, இசை, நடன நிகழ்ச்சிக்கும் அனுமதிக்கபடவில்லை, இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

புதுச்சேரி : கடலில் மக்கள் இறங்கவும், கடற்கரைக்கு வாகனங்கள் செல்லவும் புதுச்சேரி அரசு தடை விதித்துள்ளது. கடற்கரை சாலையில் கலை நிகழ்ச்சி, இசை, நடன நிகழ்ச்சிக்கும் அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு காரணமாக புதுச்சேரி அரசு துக்கம் அனுசரிப்பதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங் மறைவால் அரசு சார்பில் கேளிக்கை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 2024-ஆம் ஆண்டு முடிந்து 2025-ஆம் ஆண்டு பிறந்துள்ளதையொட்டி உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டின. புத்தாண்டு பிறப்பு புதுச்சேரியில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. நட்சத்திர ஹோட்டலகளில் நடைபெற்ற மதுவுடன் கூடிய கேளிக்கை நிகழ்ச்சிகளில், சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கடற்கரை சாலையில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் லட்சகணக்கானோர் குவிந்தனர். ஆனால் இந்த முறை மன்மோகன் சிங் மறைவால் புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரையில் பாட்டு கச்சேரி மற்றும் இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் புத்தாண்டை கொண்டாட வந்த அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இருந்தாலும் அங்கு கூடியிருந்தவர்கள் நள்ளிரவு 12 மணிக்கு புதிய வருடம் பிறந்ததும், புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஹேப்பி நியூ இயர் என கோஷங்களை எழுப்பியும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். ஆனால் பல்வேறு இடங்களில் தனியார் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டி.ஜே. நடன நிகழ்ச்சியில் மக்கள் கலந்துகொண்டு இசைக்கேற்ப நடனமாடினர்.

பின்னர் புத்தாண்டை வரவேற்று கொண்டாடினர். இதேபோல் புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில், ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமலிருக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதனிடையே கடற்கரை சாலையில் நள்ளிரவு 12:30 மணிக்கு மேல் கூடியிருந்த கூட்டத்தை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர். முன்னதாக குடிபோதையில் கடற்கரைக்கு வந்த வாலிபர்களையும் போலீசார் விரட்டினர். இதனால், பரபரப்பு நிலவியது. புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நகர பகுதி முழுதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் தீவிரப்படுத்தி இருந்தனர்.

பொதுமக்கள் அதிகம் கூடுவதை கட்டுப்படுத்தும் வகையில் புதுச்சேரி நகருக்குள் நுழையும் அனைத்து முக்கிய சந்திப்புகளிலும் தடுப்பு கட்டைகள் அமைத்து தீவிர சோதனைக்குப் பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.

தலைப்பு செய்திகள்

" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
"மக்களுக்கு பிரச்சனைன்னா ஓடோடி வரணும் " ஆட்சியருக்கு JCD பிரபாகர் அதிரடி உத்தரவு
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget