தமிழகத்தில் மது விற்பனையை அதிகப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது - நாதக காளியம்மாள்
நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மகளிரணி பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

மதுவினால் அரசு இயங்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும்போது மதுபான ஆலைகள், மது கடைகளை உடனே இழுத்து மூட வேண்டியதுதானே என நாம் தமிழர் கட்சி மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கரூரில் காளியம்மாள் பேட்டியளித்துள்ளார்.

கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மாநில மகளிரணி பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் தலைமையில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் நன்மாறன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 5 பேர் மட்டுமே ஆட்சியரை சந்திக்க அனுமதிக்க முடியும் என கூறியதால் போலீசாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட, இதனை தொடர்ந்து தங்களை அனுமதிக்கவில்லை என்றால் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.

போலீசார் அனுமதித்தனர், தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து பூரண மதுவிலக்கை அமல்படுத்த மனு அளித்துச் சென்றனர். செய்தியாளர்களிடம் பேசிய காளியம்மாள், தமிழகத்தில் உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் பூரண மதுவிலக்கு அமைக்கப்பட்ட வேண்டுமென திமுகவினர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த நிலையில், தற்போது வரை தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

மதுபான கடைகளில் பாட்டில் விலையை விட அதிகமாக விற்கப்பட்டு வருகிறது. சில மாநிலங்களில் கல்வியை ஊக்கப்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் மது விற்பனையை அதிகப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மதுவினால் அரசு இயங்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய நிலையில், அப்புறம் எதற்கு மதுபான ஆலைகள், மது கடைகள். உடனே இழுத்து மூட வேண்டியதுதானே எனவும் தமிழக அரசு பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















