மேலும் அறிய

அமைச்சரிடமே Gpay-ல் பணம் வாங்கிய கோயில் அர்ச்சகர்.! அறநிலையத்துறை அதிரடி ஆக்‌ஷன்- என்ன தெரியுமா.?

Minister Ramesh Tiruchendur temple priests : திருச்செந்தூர் கோயிலில் ரகசிய ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ரமேஷிடம் அர்ச்சகர்கள் தரிசனத்திற்கு பணம் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அறநிலையத்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழக அமைச்சர்கள் ஆய்வு

தமிழகத்தில் முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிலையில், 34 அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் பல்வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில்,  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வுக்காக வந்திருந்தார். அப்போது அமைச்சர் ரமேஷ் மட்டும் முக்கவசம் அணிந்து பக்தர்களோடு பக்தர்களாக சென்று கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு கட்டணம் எவ்வளவு? என அங்கு இருந்த அர்ச்சகர்களிடம் கேட்டுள்ளார்.இதற்கு அர்ச்சகர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் என 4 பேருக்கு 4000 ரூபாய் தர வேண்டும் என கேட்டுள்ளார். இதனையடுத்து 
அர்ச்சகரின் மொபைல் எண்ணிற்கு  Gpay மூலம் பணத்தை அனுப்பியுள்ளார்.

கோயிலில் அமைச்சர் ரமேஷ் ரகசிய ஆய்வு

இது தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் புகார் செய்ததையடுத்து இந்த சம்பவம் தெரிவந்தது. இதனையடுத்து அமைச்சரிடம் லஞ்சம் பெற்றது தொடர்பாக திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர் கோயிலில் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இன்று ( 29.06.2026)  திருக்கோயில் வளாகத்தில் ஆய்வு செய்ததில் இந்திருக்கோயிலுக்கு வருகை புரிந்த பக்தர்களிடம் அர்ச்சனை கைங்கரியம் செய்து வரும் ஐயப்பன் என்பவர் தரிசனத்திற்கு முறைகேடாக பணம் பெற்று வந்தது தெரிய வந்ததாக கூறியுள்ளார். 

இதனையடுத்து ஜயப்பன் ஐயர் என்பவரை  அமைச்சர் விசாரணை செய்ததில் ஐயப்பன் ஐயர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்றும் அன்னார் மீது தக்க நடவடிக்கை எடுக்க  உள்துறை கண்காணிப்பாளரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐயப்பன் ஐயர் குற்றத்தை ஒப்புக்கொண்டு 29.05.2025 தேதிய கடிதத்தில் தாங்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவேன் என தெரிவித்திருந்தார்.

அமைச்சரிடம் பணம் வாங்கிய அர்ச்சகர்

எனவே இத்திருக்கோயில் நலன் மற்றும் பக்தர்களின் நலன் கருதி இதற்கு மேல் கைங்கர்யம் செய்திடும் பட்சத்தில், தங்களது செயல்பாடுகள் ஏற்க கூடியதாக இருக்காது என்பதால், உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டியதாக உள்ளது. எனவே திருச்செந்தூரை சேர்ந்த ஐயப்பன் என்பவரை சட்டப்பிரிவு கீழ்இவ்வுத்தரவு தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை இத்திருக்கோயில் பூஜை கைகரிய செய்வதற்கு நடை செய்து உத்தரவிடப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல திருச்செந்தூர் கோயிலில் கட்டணமில்லா முடிகாணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் முடியிறக்கும் பணியாளர்கள் சிலர் முறைகேடாக பணம் பெற்று கொண்டு முடியிறக்கம் செய்வதாக செய்தி வெளியானது. இதனையடுத்து வீடியோ தரவுகளை ஆய்வு செய்ததில் அவ்வாறு கையூட்டாக பணம் பெற்று கொண்டு முடியிறக்கம் செய்த முடி இருக்கும் பணியாளர்கள்சங்கர் மற்றும் வே நாகராஜ் ஆகிய இரண்டு முடி இறக்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காணிக்கை பிரிவு கண்காணிப்பாளரிடமிருந்து அறிக்கை வரப்பெற்றுள்ளது.

அர்ச்சகர், காவலாளி சஸ்பெண்ட்

அதன் படி கட்டணமில்லை முடிகாணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் முறைகேடாக பணம் கையூட்டு பெற்று திருக்கோயில் நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்திய முயயிறக்கும் பணியாளர்கள் சங்கர் மற்றும் வே நாகராஜ் ஆகியோரின் மீது எடுக்கப்பட வேண்டிய ஒழங்கு நடவடிக்கை தொடர்பாக  மேற்படி பணியாளர்களின் தொழில் உரிமம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிடப்படுகிறது. மேற்படி முடியிறக்கும் பணியாளர்கள் தற்கால பணி நீக்கம் செய்யப்படும் காலத்திற்கு உரிய முடி காணிக்கை பங்குத் தொகை மற்றும் ஊக்கத்தொகை ஆகியன மாதாந்திர பட்டியலில் நிறுத்தம் செய்து பட்டியலை சமர்ப்பிக்க முடிகாணிக்கை பிரிவு கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget