கெடிலம் ஆற்றில் குளிக்க சென்ற 6 சிறுமிகள் உள்பட 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
கடலூரில் ஆற்றில் குளித்த 6 சிறுமிகள் மற்றும் இளம்பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கெடிலம் ஆற்றில் நீரில் மூழ்கிய 7 பேரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் 7 பேரும் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்அருங்குணத்தில் வசிப்பவர்கள் சிறுமிகள் சுமுதா, பிரியா,மோனிகா, சங்கீதா, பிரியதர்ஷினி கவிதா மற்றும் இளம்பெண் நவநீதா
கெடிலம் ஆற்றில் குளிப்பதற்காக சிறுமிகள் சுமுதா, பிரியா,மோனிகா, சங்கீதா, பிரியதர்ஷினி கவிதா மற்றும் இளம்பெண் நவநீதா ஆகியோர் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில் தடுப்பணைக்கு அருகே ஏற்பட்ட சுழலில் இரண்டு பேர் நீரில் மூழ்கியுள்ளனர். அவர்களைக் காப்பாற்ற சென்ற ஐந்து பேரும் நீரில் மூழ்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிக்கிச்ச்கை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி ஏழு சிறார்களும் உயிரிழந்தனர். இதில் திருமணமாகி ஒரு மாதமே ஆகிய இளம்பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த சம்பவத்திற்கு காரணம் கெடிலம் ஆற்றில் மணல் எடுக்கப்பட்டதால் உருவாகிய ஆழமான பள்ளத்தில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்திருகாலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்