6 PM Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள்..! இதுவரை உங்களைச் சுற்றி நடந்தது இதுதான்..?
6 PM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
-
திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்க வேண்டும். புத்தாண்டு வாழ்த்து கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
சென்னையைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் ஏழு மண்டலங்களில் சென்னை சங்கமம் மற்றும் நம்ம ஊரு திருவிழா நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கனிமொழி எம்.பி கூட்டாக அறிவித்துள்ளனர்.
- யார் முதுகிலும் சவாரி செய்யாமல், தனித்து போட்டியிட்டு பா.ஜ.க.வால் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற முடியுமா ? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
-
மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார்.
-
நாமக்கல் மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு - சிலிண்டர் வெடிவிபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை 477 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பை விட 45 சதவிகிதம் அளவிற்கு கூடுதலாகும். சென்னையில் 437 மி.மீ பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தியா:
-
கர்நாடகாவில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிடும் என்றும், யாருடனும் கூட்டணி கிடையாது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
- குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் இன்று அதிகாலை பேருந்தும் எஸ்யூவி காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர்.
- சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைக்க செருவேலி எஸ்டேட் உட்பட 2 ஆயிரத்து 570 ஏக்கர் நிலத்தினை கையகப்படுத்த கேரள அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
- ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் விமர்சனங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அது நம்மை வலுவாக்க உதவுகிறது. அவர்கள்தான் என் குரு என இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
உலகம்:
-
உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்ததை அந்நாட்டு மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
- 16வது போப்பான பெனெடிக்ட் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது95.
- 2022 இல் உலகை உலுக்கிய நோய்கள்: கோவிட் -19 தவிர, mpox நோய், லாசா காய்ச்சல், மேற்கு நைல் காய்ச்சல், மார்பர்க் வைரஸ் நோய், ஜிகா, தக்காளி காய்ச்சல் மற்றும் ஒட்டகக் காய்ச்சல் ஆகியவை 2022ல் உலகை உலுக்கிய நோய்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
- கிரிமியாவில் உள்ள சிம்ஃபெரோபோல் என்ற இடத்தில் இந்திய மருத்துவ மாணவர்கள் பயணித்த கார் மரத்தில் மோதியதில் 4 இந்திய மருத்துவ மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.