சிக்கித்தவிக்கும் தமிழக மாணவர்கள்! இரவோடு இரவாக பறந்த போன் கால்! முதலமைச்சரின் அதிரடி நடவடிக்கை!
போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தமிழக மாணவர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தமிழக மாணவர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் நாசர் உறுதியளித்துள்ளார்.
காஷ்மீரில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் 17 தமிழக மாணவர்கள் தங்களை பாதுகாப்பாக மீட்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
பஹல்காம் தாக்குதலில் இந்தியர்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்தியா சிந்தூர் தாக்குதலை தொடங்கியது. பாகிஸ்தானில் உள்ள பல தீவிரவாதிகளின் முகாம்களை இந்தியா அழித்தது.
இதையடுத்து இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் இந்தியாவை சீண்டும் வகையில் திடீரென ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியது. ஜம்மு, உதாம்பூர், ஜெய்சல்மர், பஞ்சாப் உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை நடத்தியது. ஆனால் இந்த தாக்குதலை இந்தியா வானிலேயே முறியடித்தது.
பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் இந்தியாவில் பல்வேறு எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய போர் பதற்ற சூழலில் காஷ்மீரில் இருக்கும் தமிழக மாணவர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு வான்வழி போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக மாணவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் தங்களை பாதுகாப்பாக மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள்னர்.
இந்நிலையில் அமைச்சர் நாசர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் தமிழக மாணவர்கள் நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “இதுவரை 52 தமிழக மாணவர்களை அடையாளம் கண்டுள்ளோம். இதுகுறித்து தகவல் வந்ததும் முதலமைச்சர் இரவோடு இரவாக கால் செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
வான்வழிகளும் தரைவழிகளும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் தயாராக இருக்கிறார். அந்த 52 பேரிடமும் எங்களோடு தொடர்பில் இருக்கின்றனர். நாங்களும் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறோம்.” எனத் தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் “நிலைமை சீரானதும் தமிழக மாணவர்கள் மீட்கப்படுவர். முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்து வருகிறார்.
ஜம்முவில் உள்ள தமிழக மாணவர்களை மீட்டு வர முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த 41 மாணவர்கள் ஸ்ரீநகரில் தங்கி பயின்று வருகின்றனர். தமிழ்நாடு அரசின் உயரதிகாரிகளும் மாணவர்களுடன் நேரடியாக பேசியுள்ளனர்.
மாணவர்கள், பெற்றோர்கள் பதற்றம் அடைய வேண்டாம். ஜம்முவில் உள்ள தமிழ்நாடு மாணவர்கள் 8069009901 என்ற டோல் ஃப்ரீ எண்ணை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





















